கோவை

பூட்டானில் நடைபெற்ற பாரா த்ரோபால் போட்டியில் தங்கப் பதக்கங்களை வென்று கோவை திரும்பிய வீரர் வீராங்கனைகளுக்கு பாஜக கோவை மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் சபரி பாலன் தலைமையில் ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

பூட்டன் நாட்டில் உள்ள திப்புவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா த்ரோபால் போட்டி கடந்த வாரம் நடைபெற்றது.இந்தியா -பூட்டான் இடையேயான நடைபெற்ற பாரா த்ரோபால் போட்டியில் தமிழ்நாடு,உத்திர பிரதேசம், மகாராஷ்டிரா ஹரியானா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பலர் பங்கேற்றனர்.

இதில் தமிழகம் சார்பில் கோவையை சேர்ந்த சுபாஷ்,மோகன் குமார் சதீஷ்குமார்,சுமதி ஆகிய நான்கு பேர் பாரா திரோபாலில் பங்கேற்று தங்கப்பதக்கங்களை வென்றுள்ளனர்.

கோவை திரும்பிய வீரர் வீராங்கனைகளுக்கு ரயில் நிலையத்தில் பாஜக கோவை மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் சபரிபாலன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வீரர்கள், இது போன்று வெளிநாடுகளில் நடைபெறும் மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா போட்டிகளில் பங்கேற்பதற்கான போக்குவரத்து வசதிகளை தமிழக அரசு உதவ வேண்டும் எனவும் ,போட்டிகளில் வெற்றி பெறுவதன் மூலம் தமிழகத்திற்கு பெருமை சேர்ப்போம் எனவும் தெரிவித்துள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *