ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்

குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் தேசிய குழந்தைகள் தினம், சர்வதேச குழந்தைகள் தினம் மற்றும் உலக குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை எதிர்ப்பு தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு நடைபயண பேரணி

திருவாரூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் தேசிய குழந்தைகள் தினம், சர்வதேச குழந்தைகள் தினம் மற்றும் உலக குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை எதிர்ப்பு தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு நடைபயண பேரணியினை மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் . ஜெய் குமார் உடனிருந்தார் பேரணியில் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்கள் குழந்தை திருமணங்களை தடுத்தல் குழந்தை தொழிலாளர் முறையினை ஒழித்தல், அனைத்து குழந்தைகளும் பள்ளி செல்லுதல் குழந்தைகள் போதை பொருட்கள் பயன்படுத்துதல் தடுத்தல் போன்ற பதாகைகளை பேரணியில் எடுத்து சென்றனர்.

பேரணியானது விளமல் அரசினர் உயர்நிலை பள்ளியினை சென்றடைந்தது குழந்தைகளுக்கான சட்டங்கள் குழந்தை திருமணங்கள் பாலியல் வன்கொடுமைகள் போதைபொருள் ஒழித்தல் குறித்து கலைக்குழு மூலம் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது

நடைபயண பேரணியில் 300-க்கும் மேற்பட்ட மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகின் கீழ் பணியாற்றும் அரசு அலுவலர்கள், கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக, மாவட்ட ஆட்சியர் தலைமையில் நமது திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து குழந்தைகளையும் 18 வயது வரை பள்ளியில் கல்வி கற்பதனை உறுதி செய்வோம்.

குழந்தைகளுக்கான வாழும் உரிமை, வளரும் உரிமை, பாதுகாப்பு உரிமை மற்றும் பங்கேற்பு உரிமை ஆகியவற்றை உறுதி செய்வோம் மேலும், நமது அனைத்து தளங்களிலும் மாவட்டத்தில் உள்ள குழந்தைகளுக்கு எதிரான உடல் மற்றும் மன அளவிலான வன்முறையோ, குழந்தை தொழிலாளராகவோ, குழந்தை திருமணமோ, பெண் சிசு மற்றும் கருக்கொலையோ, பாலின பாகுபாடோ, ஜாதி வேற்றுமையோ, குழந்தை கடத்தலோ நடைபெற அனுமதிக்க மாட்டோம் என்றும் குழந்தைகளின் பாதுகாப்பை நாம் அனைவரும் இணைந்து உறுதி செய்வோம்.

அவ்வாறு எங்கேனும் குழந்தைகளின் பாதுகாப்புக்கு எதிரான தீங்கிழைத்தலோ அல்லது வன்முறையோ நடைபெற்றால் நடைபெறுவது போல் தெரிந்தால் உடனடியாக 1098 என்ற எண்ணிற்கு தொடர்புகொண்டு புகார் அளிப்போம். நமது திருவாரூர் மாவட்டத்தை ஒரு பாதுகாப்பான குழந்தை நேய மாவட்டமாக. மாற்ற மனமார. உறுதி அளிக்கிறோம் என்ற உறுதிமொழி அனைத்து அரசு அலுவலர்களும் எடுத்துக்கொண்டனர்.

நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் கு.சண்முகநாதன், திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, இணை இயக்குநர் (சுகாதாரபணிகள்) மரு.செல்வகுமார் துணை இயக்குநர் (குடும்பநலம்) மரு.உமா, திருவாரூர் நகர்மன்றத்தலைவர் புவனப்பரியா செந்தில் ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்ட பணிகள் மாவட்ட திட்ட அலுவலர் மு.வேதநாயகி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நடராஜன் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் புவனா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் குழந்கைள் நல அமைப்பின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *