எஸ். செல்வகுமார் சீர்காழி செய்தியாளர்

சீர்காழி பகுதிகளில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேரில் ஆய்வு

சீர்காழி வட்டம் சேமங்கலம் ஊராட்சியில் ஆளவேலி வடிகால் வாய்க்காலினையும், கோபாலசமுத்திரம் ஊராட்சியில் உள்ள நரிக்குறவர் காலனி தெரு ஆகிய பகுதிகளை மாவட்ட ஆட்சியர் திரு.ஏ.பி.மகாபாரதி இ.ஆ.ப.,அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாதுறை வட்டம் பட்டமங்கலம் ஊராட்சியில் உள்ள வ.உ.சி நகரில் தேங்கி இருந்த மழைநீரை வெளியேற்றும் பணிகளையும் ,சீர்காழி வட்டம் சேமங்கலம் ஊராட்சியில் ஆளவேலி வடிகால் வாய்க்காலினையும், கோபாலசமுத்திரம் ஊராட்சியில் உள்ள நரிக்குறவர் காலனி தெரு ஆகிய பகுதிகளை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

வடகிழக்கு பருவமழை காரணமாக மயிலாடுதுறை வட்டம் பட்டமங்கலம் ஊராட்சியில் உள்ள வ.உ.சி நகரில் மழைநீர் தேங்கி இருந்ததை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டு, மழைநீரை வடியவைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களிடம்; ஆலோசனை மேற்கொண்ட போது பத்துவேலிக்கன்னி வாய்க்கால் கடந்த 15 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் உள்ளதை கண்டறிந்து, உடனடியாக ஜே.சி.பி இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றி,தேங்கி இருக்கும் மழைநீரை வெளியேற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் அவர்கள் அலுவலர்களுக்கு உத்தரவிட்டர்கள்.

அதனடிப்படையில் உடனடியாக ஜே.சி.பி இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றி தேங்கி உள்ள மழைநீரை வெளியேற்றும் பணிகள் தொடங்கி நடைபெற்றதை மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு செய்தார். தொடர்ந்து சீர்காழி வட்டம் சேமங்கலம் ஊராட்சியில் உள்ள ஆளவேலி வடிகாலினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டு கரைகளின் பலத்தினை ஆய்வு செய்து,விவசாயிகளிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

பின்னர் கோபாலசமுத்திரம் ஊராட்சியில் உள்ள நரிக்குறவர் காலனி தெருவில் அடிப்படை வசதிகள் கோரி கோரிக்கை பெறப்பட்டதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரடியாக நரிக்குறவர் குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று, அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து,பொதுகழிப்பறை,தொகுப்பு வீடு,வீட்டு மனைப்பட்டா உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தரவிட்டார்கள்.

இந்நிகழ்வுகளின்போது ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை திட்ட இயக்குநர் ஸ்ரீலேகா தமிழ்செல்வன், நீர்வளத்துறை செயற்பொறியாளர் சண்முகம், வேளாண்மைதுறை இணை இயக்குநர் சேகர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் செயற்பொறியாளர் செந்தில்குமார்,மயிலாடுதுறை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருமலைக்கண்ணன், இளங்கோவன், மயிலாடுதுறை வட்டாட்சியர் சபீதா தேவி, சீர்காழி வட்டாட்சியர் இளங்கோவன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *