கோவையில் பாரம்பரிய அடையாளத்தின் ஒரு பகுதியாக உள்ள கோயம்புத்தூர் கேரளா கிளப்பின் 91வது ஆண்டு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது…

கடந்த 1932 ம் ஆண்டு கிருஷ்ணன் நாயர் அவர்கள் வாடகை கட்டிடத்தில் உருவாக்கப்பட்ட கேரளா கிளப், 1932ம் ஆண்டிலேயே முதல் தலைவராக திரு.A.V.கோவிந்த மேனன் அவர்களை தேர்வு செய்து, அவர் மூலமாக அன்றைய கோயம்புத்தூர் மாவட்ட நீதிபதி திரு.ராவ் பகதூர் அவர்களை வைத்து கேரளா கிளப்பின் அடிக்கல் நாட்டபட்டது.

கோவையில் உள்ள மலையாளி அமைப்புகளில் பழமை பெற்ற அமைப்பான கேரளா கிளப்பில், மலையாளிகள் மட்டுமல்லாமல் அனைத்து மொழியினரும் உறுப்பினராக உள்ளனர்.இந்நிலையில் கேரளா கிளப் துவங்கி 91 ஆண்டுகள் நிறைவடைந்து 92 வது துவக்க விழா கேரளா கிளப் வளாகத்தில் நடைபெற்றது..

இதில் சிறப்பு விருந்தினராக கோவை மாநகர காவல் துறை ஆணையர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்..

முன்னதாக நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கேரளாகிளப்பின்தலைவர்அசோக்,மற்றும்செயலாளர்ராஜ்குமார்,ஒருங்கிணைப்பாளர்கள் ஸ்ரீ ஹரி,பாலகிருஷ்ணன் ஆகியோர் பேசினர்..
கேரளா கிளப்பிற்கு இந்தியாவிலும், வெளி நாடுகளிலுமாக 120 கிளுப்புகளுடன் இணைப்பு உள்ளது.

அங்கிருந்து எல்லாம் அன்றாடம் பெரும்பான்மையானவர்கள் விருந்தினர்களாக வருகின்றனர். இன்றைக்கு கிளப்பில் 850 க்கும் அதிக உறுப்பினரகள் உள்ளனர். மட்டும்மல்லாமல் 64 ஆண்டு பழக்கம் பெற்ற மகளிர் மன்றம் கிளப்பின் செயல் பாடுகளுக்கு உறுதுணையாக உள்ளனர்.

கேரளா கிளப்பில் 12 ஆடம்பர தங்கும் அறைகளும், பார்ட்டி ஹால்கள், சிந்தடிக் தரை தளம் பதித்த இண்டோர் இறக்கை பந்து விளையாட்டு தளமும், உயர்தர உடற் பயற்சி கூடம், பில்லியர்ட்ஸ் கூடம்,நிர்வாகிகள் கூட்டம் நடத்தும் போர்டு ரூம், குளிருட்டப்பட்ட பேமிலி ரெஸ்டாரண்ட், பேமிலி லான், பெர்மிட் அறைகள் இருப்பதாகதெரிவித்தனர்..

குறிப்பாக,கேரளா கிளப்பின் புகழ் பெற்ற ருசிகரமான உணவு அனைவர் மத்தியிலும் பிரபலமாக இருப்பதாக தெரிவித்தனர்.. தற்போது கோவையில் ருசிகரமான உணவு வகைகளின் உணவுக்கூடமாக கேரளா கிளப் விளங்குகிறது.

ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற ஆடல்,பாடல் போன்ற பல்வேறு விதமான கலைநிகழ்ச்சிகளை கேரளா கிளப் உறுப்பினர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு ரசித்தனர்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *