ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு த.மா.கா. ஆதரவு அளிக்கிறது.

த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் எம்.பி.தஞ்சைமாவட் டம் கும்பகோணத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை பொறுத்தவரை படிப்படியாக மூட வேண்டும் என்பதுதான் த.மா.கா.வின் நிலைப்பாடு தஞ்சை மாவட்டத்தில் ஏற்கனவே 155டாஸ்மாக் கடைகள் இருந்த நிலையில், தற்போது 138 கடைகள் உள்ளது. கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரூ.12 கோடி விற்பனையான நிலையில் இந்த ஆண்டு ரூ.10லட்சம் விற்பனை குறைந்து உள்ளதாக செய்திகள் வந்திருப்பது பாராட்டக் கூடியது. அடுத்த ஆண்டு மேலும் குறைந்து 50 சதவீதம் விற்பனையாக வேண்டும்.

சமீபத்தில் பெய்த மழையால் டெல்டா மாவட்டங்களில் விளைந்த நெற்பயிர்கள்
வீணாகி உள்ளது. எனவே சேத விவரங்களை உடனடி யாக கணக்கிட்டு இழப்பீடு தொகையை அரசு வழங்க உறுதிப்படுத்த வேண்டும்

அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு தொடர்பாக
தென் மாநில கோவில்களுக்கு பிரதமர் மோடி வருவது என்பது அவரது தேசபக்தியையும். தெய்வ பக்தியையும் எடுத்துக்காட்டுகிறது.

வரலாற்று சிறப்புமிக்க அந்த நிகழ்ச்சிக்கு எனக்கு வந்த அழைப்பை மரியாதையாக கருதுகிறேன்.

இருப்பினும் அயோத்தி ராமர் கோவில் குடமுழு
க்கின் போது த.மா.கா. சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடை பெற உள்ளதால் பாராளுமன்ற கூட்டத்தொடர்
நடக்கும்போது கோவிலுக்கு செல்ல உள்ளேன்.

கேலோ இந்தியா விளையாட்டு போட்டியினை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி சென்னை வருகிறார்.

அது அவர் விளை யாட்டுதுறைக்கு முக்கியத்துவம் கொடுப்பதை எடுத்துக் காட்டுகிறது. எந்த மாநிலமாக இருந்தாலும் பிரதமர் மோடி மாற்றாந்தாய் மனப்பான்மை இல்லாமல் செயல்படுகிறார் என்பதற்கு இது எடுத்துக்காட்டாக அமைகிறது.

ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு த.மா.கா. ஆதரவு அளிக்கிறது ஜல்லிக்கட்டு போட்டிகளில் இறந்த வீரர்களுக்கு உரிய இழப்பீட்டை தமிழக அரசு வழங்க வேண்டும்.

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் மற்றும் படகுகளை உடனே விடுவிப் பதற்கு மத்திய அரசின் வெளியுறவுத்துறை, இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

பாராளுமன்ற தேர்தலுக்காக த.மா.கா. சார்பில் இயக்க பணி மற்றும் மக்கள் சந்திப்பு கூட்டங்கள் நடந்து வருகிறது. உரிய நேரத்தில் கட்சியின் தலைவர்கள், தொண்டர்களோடு ஆலோசித்து முடிவை தாமதம் இல்லாமல் சரியான நேரத்திலும், ஒவ்வொரு தொகுதிகளிலும் உள்ள கட்சி நிர்வாகிகள் கூறும் ஆலோசனையின் அடிப்படையில் செயற்குழுவில் அனைத்து முடிவுகளும் எடுக்கப்பட்டு த.மா.கா.வின் நிலைப்பாடு குறித்து அறிவிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மாவட்ட தலைவர் சாதிக்பாட்சா, மாநில நிர்வாகி அசோக்குமார், மாநகர தலைவர் பி.எஸ்.சங்கர் உள்பட பலர் இருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *