வலங்கைமான் ஸ்ரீ உண்ணாமலை அம்மன் ஸ்ரீ அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் தைப்பூச பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு கொடியேற்றத்துடன் துவங்கியது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஸ்ரீ உண்ணாமலை அம்மன் சமேத ஸ்ரீ அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் தைப்பூச பிரமோற்சவ விழாவை முன்னிட்டு, கடந்த 15-ஆம் தேதி கிராம தேவதைகள் அபிஷேக ஆராதாரையுடன், காஞ்சி பெரியவர் அவர்களின் குரு நமஸ்கார பூஜையும் 16-ஆம் தேதி கொடியேற்றமும், யாக சாலை பூஜை காலம்-1ம் தொடங்கியது. தொடர்ந்து தினசரி யாகசாலை பூஜைகளும் நடைபெறுகிறது. வருகின்ற 22-ஆம் தேதி சுவாமி அம்பாள் திருக்கல்யாண வைபோகமும், 24-ஆம் தேதி திருத்தேர் ஓட்டமும், 25-ஆம் தேதி புஷ்ப பல்லாக்கு, தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழாவில் சிறப்பு விருந்தினர்கள் பலர் கலந்து கொள்கின்றார்கள்.விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாக அதிகாரிஅ. ரமேஷ், பரம்பரை அறங்காவலர் கே நடராஜன் & சகோதரர்கள், சென்னை ஜி சுப்பிரமணி மற்றும் உபயதாரர்கள், வலங்கைமான்ஸ்ரீ அருணாசலேஸ்வரர் நற்பணி மன்ற அறக்கட்டளைனர் சிறப்பாக செய்து வருகின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *