புழலில் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான அலுவலகம் கதிர்வேடு பகுதியில் இயங்கி வருகிறது இதில் செங்குன்றம் கொளத்தூர் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளுக்கு இங்கிருந்து மின் சப்ளை செய்யப்படுகிறது .
இந்நிலையில் இன்று காலை சுமார் 7 மணி அளவில் திடீரென மின் சப்ளை செய்யும் டிரான்ஸ்பார்மரில் திடீரென ஒரு பகுதி எரியத் தொடங்கி அதிலிருந்து ஸ்பீடர் எனப்படும் கருவி வெடித்து சிதறியதால் தீப்பிடித்து எரிய தொடங்கியது இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
உடனே தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்ததின் பேரில் செங்குன்றம் தீயணைப்பு நிலைய அலுவலர் சீனிவாசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் வாகனத்துடன் வந்து இரசாயனம் கலந்த நீரை பீச்சி அடித்து தீயை முற்றிலுமாக அனைத்தனர்.
பின்னர் மின்சார அலுவலர் பாலசந்தர் மற்றும் உதவி செயற்பொறியாளர்கள் அலுவலர்கள் அதனை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு மாற்று வழியில் மின்சாரம் வழங்குவதற்கு ஏற்பாடு செய்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் சுமார் இரண்டு மணி நேரம் மின்சாரம் தடைப்பட்டது.