தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தூய பேதுரு ஆலய 2024 ஆம் ஆண்டு விடுமுறை வேதாகமப் பள்ளி அன்பே பெரிது என்ற தலைப்பில்
மே 1ம் தேதியில் இருந்து மே 11-ம் தேதி வரைக்கும் சிறப்பாக நடைபெற்றது. சுமார் 450 மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டார்கள்.அதன் ஒரு பகுதியாக
விடுமுறை வேதாக பள்ளி மாணவர்கள் முக்கிய வீதி வழியாக பவனி சென்றனர்.
இறுதி நாளான இன்று கலை நிகழ்ச்சிகள் மற்றும் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் மற்றும்.விடுமுறை வேதாகமப் பள்ளியில் கலந்து கொண்ட 486 குழந்தைகளுக்கும் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயபாலன் பரிசுகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில்
கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் சிவன் பாண்டியன், சுரண்டை நகர செயலாளர் கணேசன், மாணவர் அணி அமைப்பாளர்
ஜேகே ரமேஷ், ஒன்றிய இளைஞர் அணி கோமு,
அயலக அணி அமைப்பாளர் முத்து
சேகர பெருமன்ற உறுப்பினர் எஸ் பி நெல்சன். சேகர செயலர் ஜி, எஸ் செல்வன், பொருளாளர் துரைசிங்,சபை கமிட்டி அங்கத்தினர்கள் சேகர குரு கிங்ஸ் சாமுவேல், லிவிங்ஸ்டன் விமல், பால் ஆபிரகாம்,
சபை ஊழியர் செல்வின் பெனடிட் மற்றும் சபை மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்