தென்காசி;-

தமிழர் திருநாளாம் தைத் திருநாளை முன்னிட்டு ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நாரணபுரம், புதுப்பட்டி, ஆ.மருதப்பபுரம், சிவகாமியாபுரம், காசியாபுரம், ஆலங்குளம், நல்லூர், ஊத்துமலை, காவலாகுறிச்சி ஆகிய கிராமங்களில் நடைப்பெற்ற பொங்கல் விளையாட்டுப் போட்டிகளில் ஆலங்குளம் ஒன்றிய தலைவர் எம் திவ்யா மணிகண்டன் கலந்து கொண்டு, போட்டிகளை தொடங்கிவைத்து பரிசுகளை வழங்கி பாரட்டினார்.

அதனையெடுத்து சிறப்புறை வழங்கினார்

அவர் பேசியதாவது;-தமிழர் திருநாளாம் பொங்கல் ஆர்வமாக பண்டிகை உங்களுடன் கலந்து கொண்டு போட்டிகளை கண்டு களிக்க வந்துள்ளேன்.
பெரும்பாலும் பொங்கல் தினத்தில் கிராமக்களிடையே சமூக நல்லுணர்வு மற்றும் ஒற்றுமையை மேம்படுத்து வதில் இம்மாதிரியான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுவது முக்கியபங்கு வகிக்கின்றன
பொங்கல் பண்டிகையை யொட்டி நடத்தப்படும் விளையாட்டு பெரும்பாலான ஊர்களில் இன்றைய தினத்தில் தான் விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சி நடைப் பெறுகின்றன

ஆண்களுக்கான வீர விளையாட்டுகள் பெண்களுக்கான சில பிரத்யேக போட்டிகள் நடைப்பெறுவது கான முடிகிறது.
கிராமப் பகுதிகளிலும் விளையாட்டில் ஆர்வமாக
இருக்கும் நபர்கள் இந்த விளையாட்டு மூலம் வெளி உலகத்திற்கு தெரியவருகிறது.

இந்மாதிரியான போட்டிகளால்
ஏற்றத்தாழ்வுகள் இன்றி, ஜாதி, மத, பேதமின்றி அனைவரும் இதில் பங்கேற்று மகிழ்கின்ற நிலையில் எந்த ஒரு வேறுபாடு களுக்கும் இந்த பொங்கல் விளையாட்டு களத்தில் இடமில்லை என்பது கண்கூட காண முடிகிறது.

பொதுவாக, தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இப்படித்தான் பொங்கல் பண்டிகை விளையாட்டுப் போட்டிகள் கொண்டாடப்பட்டு
வருகிறது. சமத்துவம் இந்த போட்டிகளுக்கு வளர்கிறது.

இந்த விளையாட்டு போட்டிக்கு அழைத்தமைக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என தெரிவித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *