மதுரை செசி மையத்தில் மாயா கோனே விருது
வழங்கும் விழா….

மதுரை செசி மையத்தில் மாயா கோனே விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்விற்கு மத்தியபிரதேசத்தின் முன்னாள் தலைமைச் செயலர் சரத்சந்திர பேகம் தலைமை தாங்கினார். இந்நிகழ்வில் சமூக செயல்பாட்டாளர்கள், ஊடக செயல்பாட்டாளர்கள் மற்றும் அமைதி செயல்பாட்டாளர் ளின் ஆக்கப் பூர்வமான செயல்களுக்காக விருது வழங்கப்பட்டது.

மதுரை நத்தம் கடவூர் அருகே உள்ள செசி மையம் காந்திய வழியில் செயல்படும் தன்னார்வ நிறுவனமாகும். ஆண்டு தோறும் இம்மையத்தின் நிறுவனர் மாயா கோனே நினைவாக சிறந்த ஆளுமைகளுக்கான விருதுகள் கடந்த 15 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டிற்கான விருது சமூக செயல்பாட்டாளர்கள் விருதுகள் ஒரிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தைச் சேர்ந்த அருண் ஜெனா , தமிழ்நாடு , மதுரை சேர்ந்த சமூக செயல்பாட்டாளர் இளமதி (வாப்ஸ்) , ஒரிசா மாநிலம் சுந்தர்கர் மாவட்டம், ரூர்கேலாவைச் சேர்ந்த ஷேக் அபுல் கலாம் ஆசாத், மத்திய பிரதேசம், மற்றும் போபால் மாவட்டத்தைச் சேர்ந்த குமந்திற்கு வழங்கப்பட்டது.

ஊடக செயல்பாட்டாளருக்கான விருதுகள் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த முனைவர் அமர்நாத் பதக் மற்றும் பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்த துலார் பாபு தாக்கூர் ஆகியோருக்கும்
சர்வதேச அமைதி விருது முனைவர் மஜர் ஹுசைனுக்கும் வழங்கப்பட்டது.

கருத்தரங்கில் விருது பெற்றவர்கள் தங்கள் பணிகள் அனுபவங்கள் குறித்த பகிர்ந்து கொண்டனர்.
சமூக செயல்பாட்டாளர் குமந் பேசும் போது “ பெண்கள் எல்லா இடங்களிலும் ஒடுக்கப்படுகின்றனர்.

உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்தை தத்தெடுத்து அங்குள்ள 20 பெண் சிறுமிகளின் கல்விக்கு ஆரம்பம் முதல் உதவி செய்து வழிகாட்டியதால் இன்று பலரும் பல நிலைகளில் உயர் பொறுப்பில் உள்ளதாகவும், வாய்ப்பு கிடைக்கும் போது பெண்களால் சாதிக்க முடியும். இளம் பெண்கள், மாணவியருக்கு பாலின சமத்துவமம் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளித்து வருகிறோம்.” என்று கூறினார்

அமைதிக்கான விருது பெற்ற மஜர் ஹுசைன் பேசும் போது பல்வேறு சச்சரவு முரண்பாடுகளும் தீர்வு வெளியில் இருப்பவர்களை விட உள்ளூர் சமூகமே கண்டடைய முடியும் என்றார்

விழாவில் செசி மைய செயலாளர் ராஜகோபால்,, முனைவர் ஜில் கார் ஹாரிஸ், ரோகிணி புனே, மூத்த செயல்பாட்டாளர் பஞ்சாட்சரம், அமைதி சங்கத் தலைவர் சரவணன் உள்ளிட்டோரும் சத்திரப்பட்டி கடவூர் உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் கலந்து கொண்டனர்
இரவில் குழந்தை நாடகமும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *