ஆலங்குளம் பகுதிக்கு மலைப்பிரதேசம் என்பதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்:-

வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வலியுறுத்தல்:-

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளுக்கு மலைப்பிரதேசம் என்பதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டுமென தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புதென்காசிமாவட்டம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

இதுகுறித்து, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கண்ணியாகுமரி மண்டலத் தலைவரும், தென்காசி மாவட்டத் தலைவருமான டி.பி.வி.வைகுண்டராஜா. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளை மலைப்பிரதேசமாக அரசு அறிவித் துள்ளது.

இதனால் பெரிய தொழிற்சாலைகளோ,கட்டடங்களோ கட்ட முடியவில்லை. எனவே ஆலங்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு மலைப்பிரதேசம் என்பதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்

விவசாயிகளையும் வணிகர்களையும் மிகவும் பாதிக்கக் கூடிய திருநெல்வேலி தென்காசி சாலை அமைந்துள்ள மாறாந்தை சுங்கச் சாவடியை உடனடியாக ரத்து செய்திட வேண்டும்.

தாங்கள் வணிகர்கள் மாநாட்டில் ஏற்கெனவே அறிவித்தபடி,
வணிகர்களுக்கான உரிமத்தை மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கும் நடைமுறையை செயல்படுத்த வேண்டும்,

நீர்நிலைகளை பராமரித்து சீரான விநியோகத்திற்கு வழி செய்ய வேண்டும்,

ஜிஎஸ்டி பிரச்னையில் தமிழக வணிக வரித்துறையினர் வணிகர்களிடம் கடுமை காட்டி வருவதை தவிர்க்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப் பட்டிருந்தது.

இந்த நிகழ்வில் தமிழ்நாடு அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ்ஆர். ராமச்சந்திரன்,
தங்கம் தென்னரசு, வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தென்காசி மாவட்ட வட்டாரப் பகுதிகளுக்கு மலைப்பிரதேசம் பொருளாளர் ஐவிஎன்.கலைவாணன் உள்பட பலர் உடனிருந்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *