தாராபுரத்தில் பண்ணை கோழிகள் மூலம் பரவி வரும் பறவை காய்ச்சலை தடுக்கவும், நோய் தொற்றிலிருந்து தடுக்க பண்ணைகளை ஆய்வு செய்ய கோரி தமிழ் புலிகள் கட்சியின் சார்பில் கோரிக்கை மனு..

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில், பண்ணை கோழிகளிலிருந்து பரவி வரும் பறவை காய்ச்சல் மற்றும் நோய் தொற்றிலிருந்து தடுக்க கோழிப்பண்ணங்களை ஆய்வு செய்ய கோரி, தமிழ் புலிகள் கட்சியின் சார்பில், கிழக்கு மாவட்ட செயலாளர் குண்டடம் காளிமுத்து தலைமையில், தாராபுரம் கோட்டாட்சியர் செந்தில் அரசனிடம் அவர்களிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

மேலும் அந்த மனுவில் கூறியதாவது,
தாராபுரம் சுற்றுவட்டார பகுதியில் குண்டடம், மூலனூர், அலங்கியம், தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட கோழி பண்ணைகள் செயல்பட்டு வருகின்றது. இதில் தமிழகத்தில் தொடர்ச்சியாக கோழிகளிலிருந்து பரவக்கூடிய பறவை காய்ச்சல் பரவி வருகிறது. இந்த பறவை காய்ச்சலால் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், கோழி இறைச்சிகளை சாப்பிடுவதால் உடலில் அதிக உஷ்ணத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகவும், இதனால் தாராபுரம் சுற்று வட்டார பகுதியில் இருக்கின்ற கோழிகள் மூலம் பரவும் பறவை காய்ச்சலை தடுக்கவும், கோழி பண்ணைகளை நேரடியாக சென்று ஆய்வு செய்து நோய்த்தொற்று அதிகம் ஏற்படுத்தும் பண்ணைகளில் உள்ள கோழிகளை உடனடியாக அப்புறப்படுத்தி நோய் தொற்றில் இருந்து பொது மக்களை காப்பாற்ற வேண்டும் என மனுவில் தெரிவித்தனர். இதில் மாநில அமைப்பு செயலாளர் முகிலரசன், மேற்கு மண்டல துணைச் செயலாளர் ஒண்டிவீரன், தாராபுரம் நகர செயலாளர் தண்டபாணி, தன்ராஜ், பகவதி ஆகியோர் உடன் இருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *