கடலூர் மாவட்டம், மா.பொடையூர் ஊராட்சியில் அமைந்துள்ள ஜே.எஸ்.ஏ வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி , கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும் திட்டத்தின் கீழ் மாணவிகள்

விருதாச்சலம்

விருத்தாச்சலம் வட்டம், புதுக்கூரைப்பேட்டை கிராமத்தில் தங்கி பயிற்சி பெற்று வருகின்றன

இக்கல்லூரி மாணவிகள், முகாமின் சிறப்பு தொடக்கமாக ஊராட்சி மன்ற அலுவலகத்தின் அருகே துவக்க விழா நடத்தினார். இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக கல்லூரியின் பேராசிரியர் முனைவர் எஸ் .சுந்தரவடிவு , கவுண்சிலர் டி .கே செல்வராஜ் ஐயா அவர்கள், ஊராட்சி மன்ற தலைவி திருமதி சரண்யா பாபு அவர்கள், தோட்டக்கலை அலுவலர் ராஜசேகர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கவுன்சிலர் செல்வராஜ் கிராம மக்களுக்கு இம் முகாமின்விவரங்களை எடுத்துரைத்ததோடு விவசாயத்தின் முக்கியத்துவத்தையும் அன்றாட வாழ்வில் விவசாயத்தின் பயனையும் சிறப்பாக எடுத்துரைத்தார்.”மறந்தான் மறந்தான் மனிதன் மரத்தை மறந்தான்” என்ற மேற்கோளை கிராம மக்களுக்கு சுட்டிக்காட்டியதோடு குழு மாணவிகள் மரக்கன்றை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நட்டு வைத்தனர்.

இவ்விழாவை பேராசிரியர்கள் துணையோடு ஏற்பாடு செய்த குழு மாணவிகள் ச.ஆர்த்தி, சு.அபி. ரா.அபிராமி, டே.அமல இவாஞ்சலின்,ர.அர்ச்சனா, து. ஆர்த்தி, பா.அருள் நிலா, பா.பவிதா.சி.வெ.பூமிகா, வெ.தீபா ஆகியோர் செய்திருந்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *