கோவையில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு அனைத்து மதத்தை சார்ந்த ஐந்தாயிரம்10 ஆயிரம் குடும்பத்தாருக்கு பக்கெட் பிரியானி விநியோகம்

மத பாகுபாடின்றி இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிருஸ்துவர்கள் பங்கேற்று ரமலான் கொண்டாட்டம்

நாடு முழுவதும் பிறை பார்த்து இஸ்லாமியர்கள் ரமலான் பண்டிகை கொண்டாடி மகிழ்கின்றனர்.

இந்த நிலையில் முப்பது நாட்கள் நோன்பிருந்து, விரதத்தை முடிக்கும் இஸ்லாமியர்கள், பசியின் உணர்வை அறிந்திருப்பர். கோவை கோட்டைமேடு ஹவுசிங் யூனிட் மற்றும் கிரீன் கார்டன் குடியிருப்புவாசிகள் நல சங்கம் அமைப்பினர் விடிய விடிய ராட்சத தேக்சா வில் பிரியாணி சமைக்கப்பட்டது.

இந்த பிரியாணியானது தொழுகை முடித்து வந்த இஸ்லாமியர்களுக்கும், தூய்மை பணியாளர்களுக்கும், அனைத்து மதத்தவருக்கும் பாகுபாடு இன்றி பகிர்ந்து தந்தனர்.

இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவ பாதிரியார்கள் என இந்த மத நல்லிணக்க பிரியாணி வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்தனர்.

இதில் பங்கேற்ற கோவை பல் சமய நல்லுறவு இயக்க மாநில தலைவர் ஹாஜி முகமது ரபிக் பேசும்பொழுது,

மத நல்லிணக்கம் தற்போது நாட்டிற்கு அவசியமானதாக மாறியிருக்கின்றது. அதன் அடிப்படையில் இதுபோன்று மதப் பாகுபாடு இன்றி அனைத்து நிகழ்ச்சிகளும் அனைத்து இடங்களில் நடைபெற வேண்டும். நாடு சமத்துவம் சகோதரத்துவம் மதநல்லிணக்கத்தை நோக்கி நகர வேண்டும்.

அதன் அடிப்படையில் இன்று மத நல்லிணக்க பிரியாணி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சாதி மத பாகுபாடின்றி அனைத்து மதத்தவருக்கும் உணவு பரிமாறியது பகிர்ந்து தந்தது நோன்பு நாட்களில் மிகவும் சந்தோஷமாக அமைந்தது. இதுபோன்று நல்லிணக்க நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் நடைபெற வேண்டுமென தெரிவித்தனர் .
நிகழ்ச்சியில் சுன்னத் ஜமாத் கொள்கை கூட்டமைப்பு பொதுச்செயலாளர் இனாயத்துல்லா ஹாஜியார் . ஜீவன்ஸ் அஜீஸ் பல் சமய நல்லுறவு இயக்க நிர்வாகிகள் அபுதாஹிர் இஸ்மாயில், மற்றும் கிரீன் கார்டன் குடியிருப்பு நிர்வாகிகள் கோட்டைமேடு கிரீன் கார்டன் குடியிருப்பு நிர்வாகிகள் அசாருதீன், முஸ்தபா ,கலீல் ரஹ்மான் இப்ராஹிம்ஆகியோர் உடன் இருந்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *