வெ.முருகேசன்-மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல்.

கொடைக்கானலில் இன்று மலர் கண்காட்சி துவக்கம்- முதன்முறையாக 10 நாட்கள் நடக்கிறது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் இந்தாண்டுக்கான மலர் கண்காட்சி இன்று துவங்கி மே 26ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. வழக்கமாக மலர் கண்காட்சி 2 நாட்கள்தான் நடத்தப்படும். ஆனால் இந்தாண்டு 10 நாட்கள் நடத்தப்படவுள்ளன. இதற்காக ஏற்கனவே பூங்காவில் நடப்பட்ட பல லட்சம் மலர் நாற்றுகளில் தற்போது கோடிக்கணக்கான மலர்கள் பூத்து குலுங்குகின்றன. மேலும் சுற்றுலாப்பயணிகளை கவர்வதற்காக பூங்கா அலுவலகம் அருகே ‘ஐ லவ் கோடை’ என்று சால்வியா மலர்களால் செல்பி பாயிண்ட் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானல் கோடை விழா – 2024


61-வது மலர் கண்காட்சியை வேளாண்மை உற்பத்தி ஆணையர், அரசு முதன்மைச் செயலாளர் ஆபூர்வா திறந்து வைத்து பார்வையிட்டார். உடன் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *