வாடிப்பட்டி அருகே மீனாட்சிஅம்மன்கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது


வாடிப்பட்டி அருகே குலசேகரன் கோட்டை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே இயற்கையில் எழில் கொஞ்சம் சிறுமலை காற்றாற்று ஓடை கரையில் குலசேகரபாண்டிய மன்னரால் கட்டப்பட்டு பழமையும் பெருமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் உள்ளது.

இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம் இந்த திருவிழாவில் முக்கிய நிகழ்வுகளான கொடியேற்று விழா நேற்று காலை 9.55 முதல் 10.25 வரை நடந்தது.

இந்த விழாவிற்கு பேரூராட்சி தலைவர் மு.பால் பாண்டியன் தலைமை தாங்கி னார்.முன்னாள் பேரூராட்சி தலைவர் கிருஷ்ணவேணி, கவுன்சிலர்கள் டாக்டர் அசோக் குமார், சூர்யா, கார்த்திகாராணி மோகன், நல்லம்மாள் ஆகியோர் முன்னிலையில் வகித்தனர். திருப் பணிக்குழுதலைவர் ஏடு.ராதா கிருஷ்ணன் வரவேற்றார்.

இந்த கொடியேற்று விழாவில் சிவாச்சாரியார்கள் விஸ்வநாதன் விஜய் கணேஷ், சந்தோஷ், அமுதன், நாகஜோதிஸ்வர சீனிவாசன், கிருஷ்ணகுமார் ஆகியோர் சிறப்பு யாகசாலை பூஜை செய்து கொடி ஏற்றினார். இந்த விழாவையொட்டிவண்ண வண்ண மலர்களால் அலங்கரி க்கப்பட்டு மீனாட்சி அம்மன் பச்சை பட்டுடுத்தி சிங்கார சடை முடியுடன் சிறப்பு அலங்காரத் தில் அருள் பாலித்தார்.

தினந் தோறும் மாலை 6 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்படு கிறது.முதல் நாள் காமாட்சி அம்மன் அலங் காரம், இரண்டாம் நாள் சரஸ்வதி அலங்காரம், மூன்றாம் நாள் மகாலட்சுமி அலங்காரம், நான்காம் நாள் ராஜராஜேஸ்வரி அலங்காரம், ஐந்தாம் நாள் கனகதுர்க்கை அலங்காரம்,ஆறாம் நாள் ராஜ அலங்காரம், ஏழாம் நாள் மலரை அலங்காரம், எட்டாம் நாள் 19ந் தேதி வெள்ளிக்கிழமை மாலை 7.35 மணிக்கு மேல்7.50மணிக்குள் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம், ஒன்பதாம் நாள் 20ந் தேதி மாலை 6 மணிக்கு மீனாட்சி அம்மன் திக் விஜயம், பத்தாம் நாள் 21ந் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.55 மணி முதல் 11.10 வரை மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், மாலை 6மணிக்கு ஊஞ்சலாட்டு அலங்காரம்,பதினோராம் நாள் 22ந்தேதி திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு தேரோட்டம், பன்னிரண்டாம் நாள் 23ந் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு சாந்த சுரூபிணி அலங்காரங்களில் அருள் பாலிக்கின்றார்.

இதன் ஏற்பாடுகளை கோவில் திருப்பணி குழு தலைவர் ஏடு. ராதா கிருஷ்ணன் தலைமையில் திருப்பணி குழுவினர் மற்றும் குலசேகரன் கோட்டை கிராம பொது மக்கள் செய்திருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *