திருச்சி தொகுதி அந்த அளவுக்கு தொழில், ஆன்மீகம், சுற்றுலா என பல்வேறு துறைகளில் சிறந்த விளங்கும் நகரம் தான் திருச்சி. காவிரி பாயும் கரையோரம் விவசாயமும் நன்கு செழித்து இருக்கிறது. இதனால் அனைத்து வகையிலும் ஒரு சிறப்பு பெற்ற நகரமாகவே திருச்சி இருந்திருக்கிறது.

இவ்வளவு சிறப்பு பெற்ற திருச்சி நகரத்தில் இதுவரைக்கும் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களே நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்திருக்கின்றனர். கடந்த முறை வெற்றி பெற்ற திருநாவுக்கரசர் தொடங்கி தற்போது அதில் இருக்கும் முக்கிய வேட்பாளர்கள் வரை அனைவருமே வெளியூர்களை சேர்ந்தவர்கள் தான்.

துரை வைகோ: தற்போதைய சூழலில் திமுக கூட்டணியில் மதிமுகவில் முதன்மை செயலாளர் துரை வைகோ, அதிமுக கூட்டணி சார்பில் கருப்பையா, பாஜக கூட்டணியில் அமமுக சார்பில் செந்தில்நாதன், நாம் தமிழர் கட்சி ராஜேஷ் ஆகியோர் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

கடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்று இருந்த காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட திருநாவுக்கரசர் பெரும் வெற்றி பெற்றார்.

அதன் காரணமாக கூட்டணி பலத்தில் வென்று விடலாம் என நினைத்த மதிமுக தற்போது துரை வைகோவை களம் இறக்கி இருக்கிறது. தாங்கள் வெற்றி பெற்ற தொகுதி தங்களுக்கு கிடைக்கவில்லை என காங்கிரஸ் கட்சியினர் அதிருப்தியில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் இது வெற்றியை பாதிக்காது என்கின்றனர் திமுகவினர்.

வெற்றி யாருக்கு நாம் தமிழர் கட்சியை பொறுத்தவரை இளைஞர்களிடையே சமூக வலைதளங்களில் பிரபலமான ஜல்லிக்கட்டு ராஜேஷ் களமிறங்குகிறார். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இளைஞர்களை திரட்டி பெரிய அளவில் போராட்டங்கள் நடத்தியவர். அதுமட்டுமல்லாமல் தற்போது ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்வது என கிராமப்புற இளைஞர்களிடையே இவருக்கு வரவேற்பு இருக்கிறது.

மேலும் படித்த இளைஞர்களின் ஆதரவு நாம் தமிழர் கட்சிக்கு இருப்பதால் ஓரளவு நெருக்கடி கொடுக்கும் வகையில் நாம் தமிழர் கட்சி வாக்குகளை பெறும் என்கின்றனர் திருச்சி வாசிகள். ஆனால் கள நிலவரம் திமுக கூட்டணி- அதிமுக கூட்டணி- பாஜக கூட்டணியையே சுற்றியிருக்கிறது.

மலைக்கோட்டை நகரத்தை பொருத்தவரை மும்முனை போட்டி தான் நிலவுகிறது எனவும் நடுநிலை வாக்காளர்கள் தான் வெற்றியை தீர்மானிப்பாளர்கள் என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *