தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் முன்னிலையில் சோழவந்தான் சட்டமன்ற தொகுதியில் உள்ள 241 மையங்களுக்கு வாக்கு பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

வாடிப்பட்டி,

தேனி நாடாளுமன்றத் தொகுதி உட்பட்ட சோழவந்தான் சட்டமன்ற தொகுதி யில் உள்ள 241 வாக்கு சாவடிகள் மையங்கள் உள்ளது.
இதில் 54 வாக்குச்சாவடிகள் பதட்ட மானவை என்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நேற்று காலை அனுப்பி தேர்தல் அலுவலர் தேனி மாவட்ட கலெக்டர்.சஜீவனா. முன்னிலையில் போலிஸ் பாதுகாப்போடு வாகனங்களில்அனுப்பீ வைக்கப் பட்டது. வாடிப்பட்டி தாலுகா அலுவலகத் தில் போலீஸ் பாதுகாப்போடு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ள அறையை தேனி நாடாளு மன்ற தேர்தல் நடத்தும் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.பி சஜீவனா முன்னி லையில் திறக்கப்பட்டது

அதன் பின் தேர்தலில் போட்டியிடும் வேட் பாளர்களின் முகவர்கள் முன்பாக வாக்கு பதிவு இயந்திரங்கள் எடுத் து வரப் பட்டு அந்தந்த வாக்குச் சாவடிகளுக்கு போலீசார் பாதுகாப்போடு வாகனங்களில் அனுப்பி வைக்கப் பட்டது. மேலும் வாடிப்பட்டி தனியார் பள்ளி யில் வாக்குச்சாவடி மையங் களு க்கு செல்லும் தேர்தல் மேற் பார்வை யாளர்கள் தேர்தல் நடத்து ம் அலுவலர்களுக்கான பணி ஒதுக்கீடு பூத் விவரங்கள் தெரிவிக் கப்பட்டு அதற்கான அனுமதி சீட்டு வழங்கப் பட்டது. இந்தப் பணிகளை யும் தேனி மாவட்ட கலெக்டர் ஆர்.பி. சஜீவனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துகிருஷ்ணன், தாசில்தார் மூர்த்தி, தேர்தல் துணை தாசில்தார் அல்காபுதின் உள்பட பலர்உடனிந்தனர் .

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *