கோவை மாவட்டம் வால்பாறை வனச்சரகத்திற்கு உட்பட்ட அனலி எஸ்டேட் காப்பிக் காடு கள எண் 4 ல் வைரமுத்து என்பவரின் மகன் ரவி என்ற செல்வரத்தினம் வயது வயது 60 என்பவரை இன்று மதியம் காட்டு மாடு தாக்கியதில் அவரின் வலது பக்க விலா எலும்பில் முறிவு ஏற்பட்டது

உடனடியாக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்று முதலுவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் இச்சம்பவத்தை தொடர்ந்து வனத்துறை சார்பாக 25 ஆயிரம் ரூபாயை பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் வால்பாறை வனச்சரக அலுவலர் வெங்கடேஷ் வழங்கி ஆறுதல் கூறினார்

இச்சம்பவம் அனலி எஸ்டேட் பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது எனவே சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *