திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தை அடுத்த மேல ஏர்மாள் புரம் கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர் இவரது மகளுக்கு இன்று திருமணம் நடைபெற்று உள்ளது அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு சமூகத்தை சார்ந்த வேலு என்ற 80 வயது முதியவர் உயிரிழந்துள்ளார்.

அடுத்தடுத்த தெருக்களில் திருமணமும் இறப்பு வீடும் இருந்த நிலையில் உயிரிழந்த வேலுவின் உடலை திருமண வீடு வழியாக கொண்டு சென்றுள்ளனர் அப்போது திருமண வீட்டில் பட்டாசு வெடித்து மேளதாளம் வழங்க கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது இதில் ஆத்திரமடைந்த உயிரிழந்த வேலுவின் உறவினர் சின்ராசு திருமண வீட்டினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் .

வாக்குவாத முற்றவே இரு தரப்பிற்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது தொடர்ந்து ஒருவருக்கொருவர் கம்புகளாலும் கட்டைகளாலும் கற்களாலும் தாக்கிக் கொண்டனர் அப்போது அங்கே நின்ற அம்பாசமுத்திரம் ஏர் மாள்புரம் மினி பேருந்து பின்பக்க கண்ணாடியை உடைத்தனர்.

சுமார் 20 நிமிடங்கள் அப்பகுதி போர்க்களம் போல காட்சி அளித்துள்ளது உடலை கொண்டு சென்ற வாகனமும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டது இதனை அடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அம்பாசமுத்திரம் கல்லிடைக்குறிச்சி மற்றும் விகேபுரம் காவல்துறையினர் மோதலை கட்டுக்குள் கொண்டு வந்தனர் தொடர்ந்து உயிரிழந்தவர் குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து உடலை எடுத்துப் போக செய்தனர்

வேறொரு வாகனம் கொண்டுவரப்பட்டு உடல் எடுத்துச் செல்லப்பட்டது அங்கு ஏற்பட்ட மோதலில் ஏழுக்கும் மேற்பட்டவர்களுக்கு படுகாயம் ஏற்பட்டது அவர்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் இரு தரப்பையும் சேர்ந்த 15-க்கும் மேற்பட்டவர்கள் மீது அம்பாசமுத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்தடுத்த தெருக்களை சார்ந்த இரு வேறு சமூகத்தினர் மோதிக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியது தொடர்ந்து போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *