வெறுப்பு பரப்புரை பேசிய மோடி தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து நடுநிலையை நிருபீக்க வேண்டும் ஜவாஹிருல்லா பேட்டி

சென்னை விமான நிலையத்தில் மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாடு உள்பட முதற்கட்டமாக நடந்த தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு கிடைத்து இருக்கிறது. 10 ஆண்டுகளில் மக்களுக்கு செய்த சாதனைகளை எதுவும் சொல்ல முடியாத நிலையில் பிரதமர் மோடி தேர்தல் பரப்புரையில் பேசியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை இழந்து முஸ்லீம்களுக்கு எதிராக பரப்புரை செய்து வருகிறார்.

தேசிய வளர்ச்சி கூட்டத்தில் நாட்டு வளர்ச்சி அடைந்ததால் சிறுபான்மை, தாழ்த்தப்பட்டோர் உள்பட மக்கள் பலன்களை பெற வேண்டும் என பொதுவாக பேசினார்.

ஆனால் இதை திரித்து முஸ்லீம்களுக்கு மட்டும் பெற வேண்டும் என மன்மோகன் சிங் பேசியதாக மோடி பேசி இருக்கிறார். வளர்ச்சியின் பாதையில் இந்தியாவை அழைத்து சென்றதற்கு மோடியிடம் எதுவும் சொல்ல இல்லை.

இரு சமுதாயங்களுக்கு இடையே மோதலை உருவாக்கி அரசியல் ஆதாயம் பெற மோடி கனவு காண்கிறார். 2014, 2019 ஆகிய ஆண்டுகளில் மோடிக்கு ஆதரவாக இருந்தவர்கள் வளர்ச்சி பாதையில் செல்லாமல் பிரிவினைவாததை செய்க்றார் என்பதை புரிந்து உள்ளனர்.

தேர்தல் பரப்புரையில் வெறுப்பு பேச்சு இருக்க கூடாது என தேர்தல் ஆணையர் கூறி உள்ளார். தேர்தல் ஆணையம் நடுநிலையை நிருபிக்க கூடிய தருணம் இது. இதை தேர்தல் ஆணையம் நிலை நாட்டுமான என்பதை மக்கள் எதிர்ப்பார்க்கின்றன. இந்தியாவில் இருந்த பிரதமர்கள் யாரும் பேசாத மோசமான பரப்புரை மோடி பேசி இருக்கிறார். இதில் தேர்தல் ஆணையம் நடுநிலையை நிருபீக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *