புத்தகங்களை அதிகம் நேசிப்போம், வாசிப்போம் என உலக புத்தக தினத்தை முன்னிட்டு, பல் சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் ஜே முகமது ரபிக் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்…

உலகம் முழுவதும் புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் நோக்கில் ‘உலக புத்தக தினம்’ ஏப்.23-ம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.இந்நிலையில், பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் ஹாஜி ஜே.முகம்மது ரபி உலக புத்தக தின வாழ்த்து செய்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்..

அவர் வெளியிட்ட செய்தியில்,இன்றைய நாள் உலகபுத்தக தினம் புத்தகங்களை, நேசிப்போம், வாசிப்போம்,நண்பர்களே,தூக்கு கயிற்றை முத்தமிடும் வரை படித்துகொண்டிருந்தார் உமர்முக்தர்,தூக்குமேடைக்கு செல்லும் வரை
படித்துகொண்டிருந்தார்பகத்சிங்,படுக்கும் இடம்கூட படிப்பகம் அருகே வேண்டுமென்றார் அம்பேத்கர்,
படித்த புத்தகத்தை முடிக்கவேண்டும் என்பதற்காக அறுவை சிகிச்சையை அடுத்த நாள் மாற்றசொன்னார் அறிஞர் அண்ணா,இது போன்ற புத்தகங்களை நேசித்த தலைவர்கள் வாழ்ந்த இந்திய நாட்டின் மக்களாகிய நாம்,புத்தகங்களை வாசிப்பை நேசிப்போம் என அறிக்கை வெளியிட்டுள்ளார்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *