சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு கேத்துரெட்டிபட்டியில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் சுவாமிக்கு பால் குட ஊர்வலம் நடைபெற்றது

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே கேத்து ரெட்டிபட்டி அருள்மிகு பிரசன்ன பார்வதி சமேத நஞ்சுண் டேஸ்வரர் திருகோவில் உள்ளது இக்கோயில் அங்குள்ள முன்னோர்கள் பல ஆண்டுகளாக வழிபட்டு வந்த நிலையில் சென்ற வருடம் கோயில் புனரமைப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

இந்த நிலையில் இன்று சித்ரா பெளர்ணமி முன்னிட்டு முதலாம் ஆண்டு மூலவருக்கு பால் அபிஷேகம் திருவிழா திருக்கோயிலின் தலைவர் பரமசிவம் தலைமையில் நடைபெற்றது பால்குட ஊர்வலமானது மாரியம்மன் கோயில் இருந்து மங்கள இசையுடன் மற்றும் வாணவேடிக்கையுடன் பால் குட ஊர்வலம் முக்கிய வீதிகளின் வழியாக நடைபெற்றது,

பின் கோவிலை வந்தடைந்த உடன், கணபதி பூஜை, கணபதி வழிபாடு மூலவர் உற்சவர் ஆகிய சுவாமி சிலைக்கு மஹா அபிஷேகம், மற்றும் அலங்கார தீபாராதனை நடை பெற்றது, திராளான மக்கள் சுவாமி தரிசனம் செய்த பின்னர் கோயிலில் மெகா அன்னதான்ம் நடைபெற்றது மேலும் இந்நிகழ்ச்சியில் ஊர் பொதுமக்கள் பக்தர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *