மாதவரத்தில் வாடகை கார் ஓட்டுனரை கத்தியை காட்டி பணம் பறித்த வழக்கில் மூவர் கைது

செங்குன்றம் செய்தியாளர்

மாதவரம் மூலக்கடை அருகே வாடகை கார் ஓட்டுநரை கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வழக்கில் போலீசார் மூவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுக்காவை சேர்ந்தவர் ஹரிச்சந்த் ஸ்ரீகர் ( வயது 23) இவர் தாம்பரம் அடுத்த கூடுவாஞ்சேரி பகுதியில் தங்கி ஊபரில் வாடகை கார் ஒட்டி வருகிறார்.

இவர் நேற்று முன்தினம் கொடுங்கையூரில் இருந்து மாதவரம் வழியாக மூன்று சிறுவர்களை சவாரி ஏற்றிக்கொண்டு மெரினா கடற்கரை செல்வதற்கு சென்று கொண்டிருந்தார். மாதவரம் எம் ஆர்எச் சாலையில் கார் வந்தபோது பின்னால் இருந்து ஒருவன் ஓட்டுநரின் தோள்பட்டையில் தீடீரென கத்தியை வைத்து தோள்பட்டையில் அடித்து அவரிடம் இருந்த 300 ரூபாயை பிடுங்கி பின்னர் அவரது ஏடிஎம் கார்டை வாங்கி ஏடிஎம்மில் 1500 ரூபாயை எடுத்து கொண்டு மாதவரம் அலெக்ஸ் நகர் மைதானதானத்தில் நான்கு பேரும் இறங்கி ஓடிவிட்டனர்.

அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் நடந்த இந்த சம்பவம் பற்றி மாதவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரை பெற்றுக்கொண்ட மாதவரம் காவல் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜன் இதுகுறித்து வழக்கு பதிவு சம்பவம் நடந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை ஆராய்ந்து குற்றவாளிகளை தேடி வந்தார்.

இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனே பிடிக்க புழல் சரக உதவி கமிஷனர் சகாதேவன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜன் மற்றும் தனிப்படை போலீசார் மாதவரம் ரவுண்டானா அருகே பதுங்கியிருந்த நான்கு பேரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.

போலீசாரின் விசாரணையில் அவர்கள் மாதவரம் ரவி கார்டன் பகுதியை சேர்ந்த ஜெரின்ஜோசப் ( வயது 18) பிரான்ஸிஸ் காலனியை சேர்ந்த வில்சன்ஜோ (வயது 18) மற்றும் 17 வயதுடைய சிறுவர் என தெரியவந்தது. இவர்கள் கஞ்சா போதையில் வாடகை காரை புக் செய்து டிரைவரை தாக்கி பணம் பறித்ததாக தெரியவந்தது.

பின்னர் இதுகுறித்து மாதவரம் காவல் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ராஜன் வழக்கு பதிவு செய்து சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார் .

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *