ஆதரவற்ற முதியவருக்கு மறுவாழ்வு கொடுத்த பசியில்லா தமிழகம்

தென்காசி மாவட்டத்தில் ஆதரவற்ற மக்களை மீட்டெடுத்து அவர்களுக்கு மறுவாழ்வு கொடுக்கும் பணிகளை பசியில்லா தமிழகம் அறக்கட்டளை தொடர்ந்து செய்துவருகிறது.

அந்த வகையில் கடையநல்லூர்
அரசு மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் ஆதரவற்றநிலையில் 60 வயதிற்கும் மேற்பட்ட ஒருபெண் தங்கியிருப்பதாக கடையநல்லூர் காவல் ஆய்வாளர் அவர்கள் மூலமாக பசியில்லா தமிழகத்திற்கு தகவல் வந்தது.

உடனடியாக களத்திற்குச் சென்று அந்த முதியவரை மீட்டெடுத்து காவல் நிலையம் அழைத்துவந்து அவர்களுக்கு தேவையான முதலுதவி செய்து அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து காவல்துறை ஆய்வாளர் மூலமாக பசியில்லா தமிழகத்தின் தென்காசி மாவட்டம் குடியிருப்பு பகுதியில் நடைபெற்று வரும் அன்னை பாத்திமா அலி அன்பு இல்லத்தில் அனுமதித்து தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருகின்றார்.

அந்த இல்லத்தில் அவர்களுக்கு தேவையான புத்தாடைகள் மற்றும்

பாய்,தலையணை,மற்றும் அடிப்படை பொருட்கள் அடங்கிய வெல்கம் கிட் கொடுத்து இல்லத்தில் உள்ளவர்கள் அனைவரும் இணைந்து அன்புடன் வரவேற்று இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

ஆதரவின்றி பேருந்து நிலையத்தில் தவித்துக் கொண்டிருந்த வயதான பெண்மணிக்கு ஆதரவு கரம் நீட்டிய பசியில்லா தமிழகம் குழுவினரை அந்த பகுதி மக்கள் பெருமளவு பாராட்டினார்கள்.

தென்காசி மாவட்டத்தில் ஆதரவற்ற முதியவர்கள் யாரேனும் இருந்தால் பசியில்லா தமிழகத்தை தொடர்பு கொண்டுதகவல்

தெரிவிக்கும் பட்சத்தில் அந்த நபர் மீட்டெடுக்கப்பட்டு அவருக்கு உரிய உணவு,உடை, இருப்பிடம், மருத்துவம் அனைத்தும் இலவசமாக செய்து கொடுப்பதற்கு பசியில்லா தமிழகம் தயாராக இருக்கிறது.

தமிழகத்திற்கு அனாதைகளாய் யார்வேண்டுமானாலும் வரலாம்,ஆனால்தமிழகத்திற்குவந்த பிறகுயாரும் அனாதைகள் கிடையாது, நாங்கள் இருக்கிறோம். என்றஉயரிய நோக்கத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும்

பசியில்லா தமிழகம் (93639 14416) அமைப்பிற்கு தென்காசி மாவட்ட பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *