போச்சம்பள்ளி அரசு மருத்துவமனை அருகே விவசாய தோட்டத்தில் திடீர் தீ விபத்து – அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்ததில் 5 ஏக்கர் விவசாய நிலத்தில் இருந்த காய்ந்த ஜம்பு மற்றும் தென்னை மரங்கள் எரிந்து சேதம்
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அரசு பொது மருத்துவமனை அருகே மணி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் 10 ஏக்கருக்கும் மேல் உள்ளது. இந்த நிலத்தில் சுமார் 5 ஏக்கர் அளவில் ஜம்பு வளர்ந்திருந்த நிலையில், கடந்த ஒரு மாத காலமாக வாட்டி வந்த வெயியல் அவை காய்ந்து சருகாக காணப்பட்டது.
இந்நிலையில் அடையாளம் தெரியாத நபர்கள் சிகரெட் துண்டுகளை வீசியதில் காய்ந்த ஜம்பு தீ பிடித்து எரியத்துவங்கியது. சிறிது நேரத்தில் மளமளவென பரவி சுமார் 5 ஏக்கர் விவாய நிலத்தில் இருந்த ஜம்பு முற்றிலும் எரியத்துவங்கியது. சுமார் 20 அடி உயரம் வரை தீ எரிந்ததால் நிலத்தில் இருந்த 20ற்கும் மேற்பட்ட தென்னை மரங்களில் இருந்த சருகுகள் தீ பிடித்து தென்னை மரங்களும் எரிந்தன.
பொது மக்கள் அதிகம் நடமாடும் இப்பகுதியில் தீ பிடித்து எரிந்ததை அறிந்த போச்சம்பள்ளி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். ஆனால் தீ பிடித்ததில் இருந்து சுமார் அரை மணி நேரம் கழித்தே தீயைணப்பு துறையினர் நிகழ்விடத்திற்கு வந்தனார்.
அதற்குள்ளாக சுமார் 5 ஏக்கர் நிலத்தில் இருந்த காய்ந்த ஜம்பு முற்றிலும் எரிந்து சேதமானது. தீ அணைந்த நிலையில், தீயணைப்பு வீரர்கள் மீதமுள்ள தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் போச்சம்பள்ளி பகுதியில் சுமார் ஒரு மணி நேத்திற்கு மேலாக பரபரப்பாக காணப்பட்டது.