பரமத்திவேலூர் பேரூராட்சி கழிவு குப்பைகளை தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் கொட்டி தீ வைத்ததால் பெரும் புகை மூட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானதுடன் தீ மளமளவென கட்டுக்கடங்காமல் பரவியதால் வேலாயுதம்பாளையம் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் தீயை அனைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதற்கு ஏற்படுத்தி உள்ளது.

   நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் உள்ள  பகுதிகளில் சேகரிக்கும் கழிவு குப்பைகளை அதற்கான ஒதுக்கப்பட்டுள்ள குப்பை  கிடங்கில் குப்பைகளை கொட்டி அப்புறப்படுத்தும் பகுதியில் கொட்டாமல், கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலை நான்கு வழி பாதையின் ஓரங்களில் கொட்டப்பட்டு நாள்தோறும் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் தீவைக்கப்பட்டு எடுக்கப்பட்டு வருவது வழக்கமாக இருந்து வருகிறது.

 அதேபோல் கடந்த இரு தினங்களாக சேகரிக்கப்பட்ட கழிவு குப்பைகளை கரூர் நாமக்கல் மாவட்ட எல்லை பகுதியான காவிரி  பாலம் அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் கொட்டப்பட்டு இன்று அதிகாலை தீ வைக்கப்பட்டது. குப்பையில் பற்றிய தீ மளமளவென  எரிந்து வானுயர புகை மூட்டத்துடன் பரவியது.

 இதனால்  அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள், வேலைக்கு செல்வோர்  புகையால் சாலைகள் மறைக்கப்பட்டதால், எதிரே வாகனங்கள் வருவது தெரியாத அளவிற்கு புகை மூட்டத்தால் மறைக்கப்பட்டன இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு  உள்ளாகினர்.

 மேலும் இருசக்கர  வாகனங்களில் சென்றவர்கள் வாகனங்களை இயக்க முடியாமலும் புகை மூட்டத்தால் மூச்சுத் திணறல் ஏற்பட்டும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். தீ மளமளவென பரவியதால் தீயை கட்டுப்படுத்த முடியாமல் பேரூராட்சி ஊழியர்கள் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். 

விரைந்து வந்த வேலாயுதம்பாலையம் தீயணைப்பு துறையினர்  சாலையோரத்தில் மிகுந்த புகை   மூட்டத்தை ஏற்படுத்திய தீயினை அனைத்து கட்டுப்படுத்தினர். 

இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் புகையால் மாசு ஏற்பட்டு சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டதாக அவ்வழியாக சென்றவர்கள் தெரிவித்தனர்.

 மேலும் பேரூராட்சி குப்பை கழிவுகளை கொட்டுவதற்கு என தனியாக குப்பை கிடங்கு இருந்தும் பேரூராட்சி பணியாளர்கள் தொடர்ந்து சாலையோரங்களில் குப்பைகளை கொட்டி எரியொட்டுவது வழக்கமாகியுள்ளது. 

 இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்தவித பலனும் இல்லை எனவும் சாலையில் சென்றவர்கள் வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர். இச்செயல் பகுதியில் மக்கள் மற்றும் பயணிகளிடையே பெரும் அதிருதியை ஏற்படுத்தி உள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *