எண்ணூரில் இயங்கி வந்த கோரமண்டல் உரத் தொழிற்சாலை நிரந்தரமாக மூட வலியுறுத்தி 125 வது நாளை முன்னிட்டு கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் கையெழுத்து இயக்கம்
திருவொற்றியூர்
எண்ணூர் அனைத்து கிராம நிர்வாகிகள் சார்பில் பெண்கள் இளைஞர்கள் வியாபாரிகள் பொதுமக்கள் என அனைவரும் கையெழுத்திட்டு தொழிற்சாலை நிரந்தரமாக மூட தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்
கடந்த டிசம்பர் மாதம் இரவு கோரமண்டல் உரத் தொழிற்சாலையில் இருந்து அமோனியா வாயு கசிந்து வெளியேறி சுமார் 50-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்
தாழ் குப்பம் சின்ன குப்பம் பெரியகுப்பம் முகத்துவார குப்பம் நெட்டுக்குப்பம் சத்தியவாணி முத்து நகர் உள்ளிட்ட சுமார் 33 கிராமத்தை சேர்ந்தவர்கள் தொழிற்சாலை நுழைவாயிலில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில்
தேர்தல் நடத்தை விதிமுறை காரணமாக அதிகாரிகள் காவல்துறையினர் அறிவுறுத்தலின் பேரில் போராட்டத்தை வாபஸ் பெற்று தொடர்ந்து வீடுகளிலேயே போராட்டம் நடத்தி வரும் போராட்டக்காரர்கள் தற்காலிகமாக மூடியுள்ள கோரமண்டல் உரத்த தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி எண்ணூர் அனைத்து கிராம நிர்வாகிகள் மற்றும் எண்ணூர் மக்கள் பாதுகாப்பு குழு ஒன்றிணைந்து எண்ணூர் தாழங்குப்பம் பகுதியில் தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கண்டன முழக்கங்களை இட்டு கையெழுத்து இயக்கத்தை துவங்கினர்
தொழிற்சாலை தற்போது மூடி உள்ள நிலையில் காற்று மாசு இல்லாமல் நல்ல காற்றை சுவாசிப்பதாகவும் ஏற்கனவே தொழிற்சாலை இயங்கி வரும் போது கண் எரிச்சல் சுவாசக் கோளாறு உள்ளிட்ட உபாதைகளில் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது அனைவரும் நல்ல காற்றை சுவாசிப்பதாகவும் எனவே தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்றும் எண்ணூர் மக்கள் பாதுகாப்பு குழு சார்பில் தெரிவித்தார்