சோழவந்தான்
சோழவந்தானில் உள்ள காமராஜர் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்து அருள்பாலித்து வரும் ஸ்ரீபத்ரகாளியம்மன் கோவில் பங்குனி பொங்கல் விழாவை முன்னிட்டு கடந்த
மே..7.ந் தேதி கொடியோற்றதுடன் திருவிழா தொடங்கியது இதன்பின்னர் பக்தர்கள் காப்பு கட்டி விரதம் மேற்கொண்டு வந்த நிலையில் மே 13.ல் அன்று பக்தர்கள் வைகையாற்று சென்று தீர்த்தம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர் பின்னர் பூச்சொரிதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
மே 14.ல் அன்று கோவில் பூஜாரி வைத்தியலிங்கம் வேல்முருகன் தலைமையில வைகையாற்றிலிருந்து்
சக்தி கரகம் எடுத்து வந்து கோவிலை அடைந்தது பின்னர் பொங்கல் வைத்து சக்திகிடா பலியிட்டு சிறப்பு பூஜைகள் செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதையெடுத்து மே 15.ல் நேற்று காலை பக்தர்கள் வைகையாற்றி லிருந்து பால்குடம் தீ சட்டி எடுத்து வந்து நேர்த்தி கடன் செலுத்தினர்.
பின்னர் இரவு நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி மற்றும் சக்தி கரகம் எடுத்து ஊர்வலமாக சென்று வைகையாற்றில் கரைத்து மஞ்சள் நீராடினர்.
இவ்விழா ஏற்பாடுகளை திருவிழா கமிட்டி மற்றும் இந்து நாடார் உறவின்முறை சங்க நிர்வாகிகள் தங்கபாண்டி ராஜகுரு. காமராஜ்.மற்றும் அழகர் சாமி சீனிவாசன். குருசாமி. ஜெயராஜ். பாண்டியராஜன் உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.