குருவித்துறை குரு பகவான் கோவில்
குருபெயர்ச்சி இலட்சார்ச்சனை தொடங்கியது.

மதுரை மாவட்டம் குருவித்துறையில்
வைகையாற்று கரையில் அமைந்து குருஸ்தலமாக விளங்கி வரும் சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோவில் முன்பு தவக்கோலத்தில் சுயம்புவாக எழந்தருளி அருள்பாலித்து வரும் குருபகவான் மே.1.ந் தேதி மேஷம் ராசிலிருந்து.ரிஷபம் ராசிக்கு பெயர்ச்சியாவதை முன்னிட்டு திருக்கோவில் வளாகத்தில் ஸ்ரீதர் பட்டர் சடகோபன் பாலாஜிபட்டர் ஆகியோர் தலைமையில் முதல் கால இலட்ச்சார்சனை தொடங்கியது.

தொடர்ந்து ஐந்து கால இலட்ச்சார்சனை முடிந்து பின்னர் மே 1.ந்தேதி மாலை 3.மணிக்கு குருபெயர்ச்சி பரிஹார மஹா யாகசாலை தொடங்கி 5.21.மணியளவில் மூலவருக்கு புனித நீர் ஊற்றி குருபகவான் மேஷம். ராசிலிருந்து ரிஷபம் ராசிக்கு பெயர்ச்சியாகும் வைபவம் நிகழ்ச்சி நடைபெறுகின்றது.

மேலும் திருக்கோவில்களூக்கு வரும் ,பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணைங்க மே.2.ந்தேதி முதல் சித்திரரத வல்லப பெருமாள் மற்றும் குருபகவான் கோவில்களில் வாரத்தில் மற்ற நாட்களில் காலை 8.மணிக்கு நடை திறந்து நன்பகல் 12.30.மணியளவில் நடை சாத்தப்பட்டு பின்னர் பிற்பகல் 3.30.மணிக்கு நடை திறக்கப்பட்டு மாலை 6.மணியளவில் நடை முடிவும்..

மேலும் வாரத்தில் வியாழன் கிழமை மட்டும் காலை 7.30.மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு மதியம் 2.மணியளவில் நடை சாத்தப்பட்டு பின்னர் பிற்பகல் 3.30.மணியளவில் கோவில் நடைதிறக்கப்பட்டு இரவு 7.மணிக்கு நடை மூடப்படும் எனவும் மேலும் குரு பெயர்ச்சி முன்னிட்டு திருகோவில் நிர்வாகத்தில் ரூ.200.க்கு லெட்ச்சார்சனை டிக்கெட் வாங்கும் பக்தர்களுக்கு மே.1.ந்தேதி மதியம் 2.மணிமுதல் 3.மணி வரை யாகசாலையில் பெயர் ராசிக்கு சங்கல்பம் செய்யப்படும் எனவும் ரூ.500.டிக்கெட்பெறும் மெய்யம்பர்களுக்கு மே. 2.ந் தேதிலிருந்து 16.ந்தேதி வரை தினசரி 50.நபர் வீதம் காலை 6.முதல் 7.வரை குருபகவான் சன்னதி முன்னிலையில் குருபகவான் வெள்ளிகாப்பு கவசத்தில் சிறப்பு தரிசனம் செய்து பெயர். ராசிகளுக்கு தனிதனியாக பரிகார அர்ச்சனை செய்து வெள்ளி டாலர் மற்றும் பிரசாதம் வழங்கப்படும் என திருக்கோவில் நிர்வாக செயல் அலுவலர் கார்த்திகைசெல்வி தெரிவித்தார்.

மேலும் விழாவின்போது குடிநீர் சுகாதாரம் லைட் வசதி குருவித்துறை ஊராட்சி நிர்வாகம் சார்பில் செய்து வருகின்றனர்.

இவ்விழா ஏற்பாடுகளை திருக்கோவில் செயல் அலுவலர் கார்த்திகைசெல்வி தாக்கார். இளங்கோவன் மற்றும் கோவில் பணியாளர் நாகராஜன் மணி ஆகியோர் செய்திருந்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *