திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் குரு பெயர்ச்சியை முன்னிட்டு தக்ஷிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடைபெற்றது.

திண்டுக்கல் நகரின் மையப்பகுதியில் பழமைவாய்ந்த அபிராமி அம்மன் உடனமர் பத்மகிரீஸ்வரர் ஞாம்பிகை உடனமர் காலஹத்தீஸ்வரார் திருக்ககோவில் உள்ளது. இந்த கோவிலில் தக்ஷிணாமூர்த்திக்கு தனி சன்னதி உள்ளது.

மே-1 புதன்கிழமை மதியம் 1 மணிக்கு மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு செல்லும் குரு பெயர்ச்சி தினம் என்பதால் கோவில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு குருநாதன் குருக்கள் தலைமையில் சிறப்பு யாகம் நடைபெற்றது அதனை தொடர்ந்து மாலை 4.30 மணியளவில் தக்ஷிணாமூர்த்திக்கு மஞ்சள், பால், தயிர் பன்னீர், இளநீர், விபூதி சந்தனம் பஞ்சாமிர்தம் குங்குமம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. இதை தொடர்ந்து சுவாமிக்கு வெள்ளி கவசம் அணிவித்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.

பக்தர்கள் செலுத்திய சுண்டல் மாலை உலர்ந்த திராட்சைகளை கொண்ட மாலை அணிவிக்கப்பட்டது இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு குருபகவான் வழிபட்டனர். இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாட்டினை அபிராமி அம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் வேலுச்சாமி வழிகாட்டுதலில், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் சண்முகவேல், வீரக்குமார், நிர்மலா, மலைச்சாமி மற்றும் கோவில் செயல் அலுவலர் தங்கலதா ஆகியோர் செய்திருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *