தென்காசி மாவட்டம் ஆவுடையானூர் தபால் அலுவலகத்தை தரம் உயர்த்திட பொதுமக்கள் அதிகஅளவு பயன்படுத்தி ஒத்துழைக்க வேண்டும் என்று தென்காசி தெற்கு மாவட்ட மதிமுக மாவட்ட செயலாளர் இராம.உதயசூரியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து தென்காசி தெற்கு மாவட்ட மதிமுக செயலாளர் இராம உதயசூரியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தென்காசி மாவட்டம், ஆவுடையானூரில் இயங்கி வரும் பகுதி நேர தபால் அலுவலகத்தை முழுநேரமும் இயங்கும் தபால் அலுவலகமாக தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை ஆவுடையாணூர் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்களின் சார்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்பியிடம் வைத்த நிலையில் மத்திய தகவல் மற்றும் தொலைத்தொடர்பு துறை அமைச்சரை, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

இது தொடர்பாக கோவில்பட்டி தபால்துறை கண்காணிப்பாளர் அளித்துள்ள பதிலில், இன்னும் ஆறுமாத கால இடைவெளியில் தற்போது இருக்கும் தபால் மற்றும் மணியார்டர் சேமிப்பு கணக்குகள் ஆகியவற்றில் கூடுதல் முன்னேற்றம், தங்களை உள்ளடக்கிய ஊர் பொதுமக்களால் ஏற்படும் பட்சத்தில் தபால் அலுவலகம் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளர்.
எனவே நமது வட்டார பொதுமக்கள், தபால் அலுவலகத்தை முழுமையாக பயன்படுத்தி தபால் அலுவலகம் தரம் உயர உதவிடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *