இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வர்த்தகர் அணி தென்மண்டல பயிலரங்கம்

தென்காசி

தென்காசியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வர்த்தகர் அணி சார்பில் வணிகர் தினத்தை முன்னிட்டு தென் மண்டல பயிலரங்கம் நடைபெற்றது.

இந்த பயிலரங்க நிகழ்ச்சிக்கு மாநில வர்த்தகர் அணி தலைவர் செய்யது சுலைமான் தலைமை வகித்தார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தென்காசி மாவட்ட தலைவர் அப்துல் அஜீஸ், நெல்லை மாவட்ட செயலாளர் பாட்டப்பத்து முகம்மது அலி, தென்காசி நகர தலைவர் அபூபக்கர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

புளியங்குடி முகமது இப்ராஹீம் ஆலிம் ஆப்சல் உலமா கிராஅத் வாசித்தார். தென்காசி மாவட்ட வர்த்தகர் அணி தலைவர் அகமது மீரான் தொகுப்புரை ஆற்றினார்.
மாநில வர்த்தக அணி பொதுச் செயலாளர் ஈரோடு நூர் முகம்மது சேட் வரவேற்புரை ஆற்றினார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் காதர் மொய்தீன், மாநில பொதுச் செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முகம்மது அபுபக்கர் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.

மாநில வர்த்தகர் அணி துணைத் தலைவர் இனாயதுல்லாஹ், மாநில வர்த்தகர் அணி செயலாளர் ஆலம் கான், தென்மண்டல இளைஞர் அணி அமைப்பாளர் முகம்மது கடாபி, மாவட்ட துணைத் தலைவர்கள் புளியங்குடி அப்துல் வஹாப், முதலியார் பட்டி கட்டி அப்துல் காதர், விவசாய அணி மாநில செயலாளர் முகம்மது அலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அரிசி பால் போன்ற உணவுப் பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரியை ரத்து செய்திடவும், தமிழ்நாட்டிற்குள் வரும் வர்த்தக பொருள்களுக்கு ஒரு முறை மட்டுமே ஜிஎஸ்டி வரி வசூல் செய்ய வேண்டும், திருநெல்வேலி முதல் தென்காசி வரை நான்கு வழி சாலையை விரைவாக முடித்து பாவூர்சத்திரம் மேம்பாலம் ஆலங்குளம் மேம்பாலம் பணிகளையும் விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு உடனடியாக கொண்டு வர தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தும், நெல்லை -ஈரோடு பாஸஞ்சர் ரயில், மற்றும் நெல்லை பாலக்காடு பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் இரண்டும் தென்காசி பகுதி மக்கள் அதிகம் பயன்படுத்தும் கீழப்புலியூர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் பயிலரங்கத்தில் நிறைவேற்றப்பட்டது. முடிவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில வர்த்தகர் அணி பொருளாளர் அல்தாப் உசேன் அனைவருக்கும் நன்றி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *