பண்ணந்தூர் கிராமத்தில் 200. ஆண்டுகள் பழமை வாய்ந்த ஜீவசமாதி சித்தருக்கு 2.ம் ஆண்டு குருபூஜை திருவிழா

கிருஷ்ணகிரி மாவட்டம் பண்ணந்தூர் கிராமத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஜீவன் சமாதி சித்தருக்கு 2.ம் ஆண்டு குருபூஜை மற்றும் கணபதி ஓமம் போன்ற பூஜைகள் நடைபெற்றது கிராமத்து பெண்கள் பால்குடம் எடுத்து முக்கிய வீதி வழியாக சென்று சித்தர் கோவிலை வந்து அடைந்தது அங்கு சிவனடியார்களுக்கும் ஊர் பொதுமக்களுக்கும் அன்னதானம் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது சிவனடியார்கள் 2 ஆண்டுகளாக பண்ணந்தூர் கிராமத்தில் உள்ள சிவன் அடியார்கள் பௌர்ணமி அமாவாசை போன்ற நாட்களில் இங்கு சிறப்பு பூஜைகளும் செய்து வருகின்றனர் மாதந்தோறும் ஊர் பொதுமக்கள் கிரிவலம் சுற்றி வருகின்றனர் இந்நிகழ்ச்சியில் கோவில் தர்மகர்த்தா செந்தில்குமார் தலைமையிலும் மற்றும் முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் பண்ணந்தூர் பழனிச்சாமி, ஊராட்சி மன்ற தலைவர் இளங்கோ, ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் திருப்பதி, அசோகன், விஜயான், லயன்ஸ் கிளப். ராதாகிருஷ்ணன், சம்பத், முத்துக்குமார் ,வேடியப்பன், முத்து முன்னிலையில் நடைபெற்றது இதில் ஊர் பொதுமக்கள் பக்தர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *