திருவாரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் பல்வேறு நலத்திட்டங்களில் மாற்றுத்திறனாளி நபர்கள் பயனடைந்துள்ளனர் 26409 மாற்றுத்திறனாளி களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை 17116 நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது 2023-2024ஆம் நிதியாண்டில் மனவளர்ச்சிக்குன்றி யோர் கடுமையாக கை,கால் பாதிக்கப்பட்டோர் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோர் நாள்பட்ட நரம்பியல் நோயினால் பாதிக்கப்பட்டோர் ஆகிய பிரிவினருக்கு 5021 நபர்களுக்கு மாதம் ரூ.2000. வீதம் மொத்தம் ரூ.11,92,42,000 பயனாளிகள் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது 2024-2025ஆம் நிதியாண்டிற்கு ரூ.12,05,04,000. நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு இதுவரை ரூ.2,00,84,000 பயனாளிகள் வங்கி கணக்கிற்கு வரவு வைக்கப்பட்டுள்ளது 2023-2024ஆம் நிதியாண்டில் அதிக உதவித் தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள் தங்களுடன் ஒரு உதவியாளரை வைத்துக் கொள்ள ஏதுவாக அவர்களுக்கு மாதாந்திர பராமரிப்பு தொகையுடன் கூடுதலாக உதவித்தொகை 214 பயனாளிகளுக்கு ரூ.1,000. வீதம் ரூ.18,47,310 வழங்கப்பட்டுள்ளது.

2024-2025ஆம் நிதியாண்டிற்கு ரூ.19,24,000. நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு இதுவரை ரூ.4,28,000 பயனாளிகள் வங்கி கணக்கிற்கு வரவு வைக்கப்பட்டுள்ளது 2023-2024ஆம் நிதியாண்டிற்கு மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் புரிய மானியம் வழங்கும் திட்டத்தின்கீழ் திருவாரூர் மாவட்டத்திற்கு ரூ.9,84,400 நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு 29 நபர்களுக்கு ரூ.9,84,333 மானியமாக வழங்கப்பட்டுள்ளது. 2024-2025ஆம் நிதியாண்டிற்கு ரூ.10,00,000. ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது 2023-2024ஆம் நிதியாண்டிற்கு மாவட்ட தொழில் மையம் மூலம் PஆநுபுP. ருலுநுபுP திட்டத்தின்கீழ், 5 விழுக்காடு மானியத் தொகை 3 பயனாளிகளுக்கு ரூ.53,750. நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு மானியத்தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. 2024-2025ஆம் நிதியாண்டிற்கு ரூ.40,000 ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. 2023-2024ஆம் நிதியாண்டிற்கு திருமணம் செய்து கொள்ளும் மாற்றுத்திறனாளி களுக்கு 14 தம்பதியர்களுக்கு தொகை ரூ.6,75,000ஃ- பயனாளிகளின் வங்கி கணக்கு எண்ணில் வரவு வைக்கப்பட்டுள்ளது. 2024-2025ஆம் நிதியாண்டிற்கு 1 பயனாளிக்கு ரூ.50,000 ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது கல்வி பயிலும் ஒன்றாம் வகுப்பு முதல் கல்லூரி வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ், 330 மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகளுக்கு ரூ.20,74,000 வழங்கப்பட்டுள்ளது.

மேலும், 75 சதவீதத்திற்கு மேல் கண்பார்வையற்ற மாணவ, மாணவிகளுக்கு எளிதில் தேர்வு எழுதிட உதவும் வகையில் வாசிப்பாளர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் 6 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ரூ.20,000. மாணவர்களின் வங்கி கணக்கில் நுஊளு மூலம் தொகை அனுப்பப்பட்டுள்ளது 152 நபர்களுக்கு இலவச பேருந்து பயணச்சலுகை அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. 0 – 6 வயது வரை உள்ள மனவளர்ச்சிக் குன்றியோர்க்கான ஆரம்ப கால பயிற்சி மையத்தில் உள்ள 50 சிறார்களுக்கு சிறப்பு கல்வி, தசை பயிற்சிகள் ஆகியன வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் ஆண்டிற்கு ரூ.9,24,963 செலவீனத்தில் செயல்பட்டு வருகிறது
0 – 6 வயது வரை உள்ள காது கேளாத இளம் சிறார்களுக்கான ஆரம்ப கால பயிற்சி மையத்தில் உள்ள 20 சிறார்களுக்கு பேச்சு பயிற்சி, சிறப்பு கல்வி ஆகியன வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்திற்கு செலவீனமாக ரூ.5,02,000 மேற்கொள்ளப்படுகிறது.
14 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கான தொழிற்பயிற்சி இல்லத்தில் உள்ள 40 மனவளர்ச்சிக் குன்றிய மாணவர்களுக்கு உணவு தங்குமிடம் மருத்துவ வசதி மற்றும் தொழில் சார்ந்த பயிற்சிகள் ஆகியவற்றுக்கு ரூ.16,48,8000 செலவீனம் மேற்கொள்ளப்படுகிறது.

திருவாரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் இரண்டு மனவளர்ச்சிக் குன்றியோர்க்கான சிறப்பு பள்ளிகள் செயல்பட்டு வருகிறது இத்திட்டத்திற்கு செலவீனமாக. ரூ.12,96,000 மேற்கொள்ளப்படுகிறது 2023-2024ஆம் நிதியாண்டிற்கு மாற்றுத்திறனாளிகளுக்கான நலவாரியத் திட்டத்தின்கீழ் இயற்கை மரணம் ஈமச்சடங்கு கல்வி உதவித் தொகை மூக்கு கண்ணாடி உதவித்தொகை திருமண நிதியுதவி ஆகியவைகளுக்கு ரூ.5,74,500 மதிப்பில் 52 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது 2023-2024ஆம் நிதியாண்டிற்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தின்கீழ் 87 பயனாளிகளுக்கு ரூ.83,52,957. மதிப்பில் வழங்கப்பட்டது தெருக்களில் சுற்றித்திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்புத்திட்டத்தின்கீழ், 7 நபர்களை மீட்பு செய்ததற்கு ரூ.10,500 செலவினம் மேற்கொள்ளப்பட்டது 2023-2024ஆம் நிதியாண்டிற்கு முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி களுக்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தின்கீழ் 3 பயனாளிகளுக்கு ரூ.3,40,401 மதிப்பில் வழங்கப்பட்டது மூன்று சக்கர சைக்கிள்கள் 5 பயனாளிகளுக்கு ரூ.45,250 மதிப்பில் வழங்கப்பட்டது 2023-2024ஆம் நிதியாண்டிற்கு மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின்கீழ், 93 பயனாளிகளுக்கு 6,36,120 மதிப்பில் வழங்கப்பட்டது 2023-2024ஆம் நிதியாண்டிற்கு காதுக்கு பின் அணியும் காதொலி கருவி வழங்கும் திட்டத்தின்கீழ், 70 பயனாளிகளுக்கு ரூ.1,94,600. மதிப்பில் வழங்கப்பட்டது.

காது கேட்காத மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளிகள் மற்றும் கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்மார்ட்போன் வழங்கும் திட்டத்தின்கீழ், 58 பயனாளிகளுக்கு ரூ.7,74,242. மதிப்பில் வழங்கப்பட்டது செயற்கை கால்கள் வழங்கும் திட்டத்தின்கீழ் 9 பயனாளிகளுக்கு ரூ.46,800 மதிப்பில் வழங்கப்பட்டது. இவ்வாறு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *