அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் தமிழ்நாடு கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது கோழிகளுக்கு வளர்ப்பு கூலியாக ரூபாய் 20 வழங்க கேட்டு மனு கொடுக்கும் போராட்டம் மாவட்ட செயலாளர் பி வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது இதில் கோழிப்பண்ணை உரிமையாளர்கள் பி கிருஷ்ணமூர்த்தி தர்மராஜ் ரமேஷ் கொளஞ்சிநாதன் தியாகராஜன் முத்து குணா என பலர் கலந்து கொண்டனர்
இதில் தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் இரமணிவேல் போராட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கி பேசினார் தமிழக விவசாய சங்க ஒன்றிய தலைவர் எம் மகேந்திரன் பொருளாளர் பி ஆர் தனவேல் ஒன்றிய குழு உறுப்பினர்கள் ராஜா சுந்தரமூர்த்தி ராஜமோகன் உட்பட ஏராள மானோர் கலந்து கொண்டனர் பின்பு வட்டாட்சியர் அவர்களிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது