எபி.பிரபாகரன்
பெரம்பலூர்
செய்தியாளர்
பெரம்பலூர் அருகே புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கைதியை வெடிகுண்டு வீசி கொல்ல முயன்றவர்களை பிடிக்க 5 தனி படைகள் அமைப்பு.
பெரம்பலூர்.ஜன.24 மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி காளி என்கின்ற வெள்ளை காளி, இவருக்கும் இவரது உறவினர்களுக்கும் இடையே ஏற்கனவே தேர்தலில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக இவரது தாத்தா வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த முன் விரோதத்திற்கு பழிக்கு பலியாக இருதரப்பிலும் இதுவரை 47 பேர் படுகொலை செய்யப்பட்டு அந்த வழக்குகள் நீதிமன்றத்தில் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வெள்ளை காளி மதுரை திருமங்கலத்தில் ஒருவரை கொலை செய்த வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறைகாவலி உள்ள இவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இன்று புதுக்கோட்டை நீதிமன்றத்தில் வழக்கில் வெள்ளை காளி ஆஜரான நிலையில் நீதிபதி உத்தரவின் பேரில் சென்னை புழல் சிறைக்கு அடைக்க உத்தரவிட்டதன் பேரில் போலீசார் பாதுகாப்பாக புதுக்கோட்டையில் இருந்து திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது ரவுடி காளிக்கு உணவு கொடுப்பதற்காக திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே உள்ள ஓட்டலில் சாப்பிடுவதற்காக ஹோட்டலுக்கு சென்றபோது அங்கு திடீரென இரண்டு கார்களில் வந்த 15 பேர் கொண்ட கும்பல் வெள்ளக்காளியை அறிவாளால் வெட்ட முற்பட்டனர். அப்போது அவர்களை தடுக்க போலீசா ருக்கும் ரவுடி கும்பலுக்கும் இடையே கடுமையான சண்டை நடந்தது. அந்த ரவுடி கும்பல் திடீரென நாட்டு வெடிகுண்டு வீசினர். இதனை அடுத்து போலீசார் அந்த கும்பலை நோக்கி துப்பாக்கியால் சுட முற்பட்டதால் அந்த ரவுடி கும்பல் தலை தெரிக்க ஓடினர்.
இதுகுறித்து மங்களமேடு போலீசாருக்கு தகவல் கிடைத்ததின் அடிப்படையில் காயம் அடைந்த மதுரை வாடிப்பட்டியை சேர்ந்த மருதபாண்டி, திருநெல்வேலி புளியங்குடியைச் சேர்ந்த விக்னேஷ் குமார், சென்னை புதுப்பேட்டையைச் சேர்ந்த ராமச்சந்திரன் உள்ளிட்ட போலீசாரை பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் உள்ள டோல்கேட்டில் உள்ள கேமராக்களில் பதிவான சி சி டிவி காட்சிகளை போலீசார் தீவிரமாக ஆராய்ந்து வருகிறார் கள். மேலும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இதுசம்பந்தமாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருச்சி மண்டல போலீஸ் ஐஜி பாலகிருஷ்ணன் சம்பவ இடத்தை பார்வையிட்டு காயமடைந்த போலீசாரிடம் விசாரணை நடத்தினார்.
பின்னர் செய்தியாளரிடம் அவர் கூறும் போது இந்த தாக்குதலில் 15 பேர் கொண்ட கும்பலை பிடிக்க 05 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வருவதாக கூறினார். மேலும் திருமாந்துறை சுங்கச்சாவடியை தடுப்புகள் மீது மோதிவிட்டு அதி வேகமாக தப்பி செல்லும் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து வருவதோடு அதில் ஒரு கார் கடலூர் மாவட்டம், எழுத்தூர் அருகே கேட்பாரற்று சாலையோரம் நிற்கும் காட்சிகளும் வெளியாகி உள்ளன. பட்டப் பகலில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திருக்கிறது.