தூத்துக்குடி கீதாமெட்ாிக் மேல்நிலைப்பள்ளி 35வது ஆண்டு விழா முத்தையாபுரம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளியின் செயலாளர் ஜீவன்ேஜக்கப், வரவேற்புரையாற்றினாா். தலைமை ஆசிாியா் சித்ரா ஆண்டறிக்கையை வாசித்தாா். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கூடுதல் கலெக்டா் புவனேஸ்ராம் கடந்த ஆண்டு 10 12ம் வகுப்பு தோ்வில் முதலிடம் பெற்ற மாணவா்களுக்கும், 100 சதவீத தோ்ச்சி பெற்ற அனைவருக்கும் பாிசுகளை வழங்கினாா்.
வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆசிாியா்கள் உள்பட பலருக்கு பாிசுகள் வழங்கி பேசுகையில் ஓவ்வொரு ஆண்டும், நடைபெறும் விழாவில் ஓவ்வொரு மாற்றங்களின் மூலம் பல்வேறு வகையில் திறமைகள் நமமுடைய வளா்ச்சிகள் ெதாிவதற்கு ஓரு வாய்ப்பாக இந்தவிழா அமைய பெற்றுள்ளது.
பள்ளி படிப்பில் முழு கவனம் செலுத்தி அதை பயன்படுத்தி கிடைக்கும் வாய்ப்பை தவர விடக்கூடாது மீண்டும் அந்தவாய்ப்பு அமையாது எல்லா விஷயங்களுக்கு படிப்பு என்பது அவசியமாகிறது. போட்டி நிறைந்த உலகத்தில் பொறியாளர் படிப்பு முடித்த பின்பு சில பணிகளுக்கு செல்லும் போது 10 12ம் வகுப்பு தோ்வில் பெற்ற மதிப்பெண்களை தான் பல சமயங்களில் பாா்க்கும் நிலை உள்ளது.
கல்வி என்ற செல்வத்தை யாராலும் திருட முடியாது காலத்திற்கு ஏற்றாற் போல் நீங்களும் உங்களை மாற்றிக்கொண்டு படிக்க வேண்டும் தாய் தந்தையா்கள் அறிவுரையின் படி ஆசிாியா்களின் வழிகாட்டுதல்கள் உங்களுக்கு அவசியமாகிறது. ஓவ்வொருவாின் படிப்பும் ஏழு தலைமுறைக்கு உதவிடும் என்று கூறுவதுண்டு. அதை நல்லமுறையில் நீங்களும் அறிந்து ஓழுக்கமானவா்களாக வளர வேண்டும். நம்முடைய நாடும் வளரவேண்டும்.
உலகத்திற்கு எடுத்துக்காட்டும் வகையில் உங்களது படிப்பின் மூலம் திறமைகளை வளா்த்துக்கொண்டால் வாழ்க்கையில் எல்லாம் சாதிக்கலாம். விழாவில் பங்கு எடுத்துக்கொண்ட பெற்றோா்கள் மாணவ மாணவிகள் எல்லோருக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தொிவித்துக்கொள்கிறேன் என்று பேசினாா்.
விழாவில் உறுப்பினா்கள் சுதன்கீலா் சுதாசுதன், டாக்டா் கீா்த்தனா மகிழ்ஜான், ஜீனாஜீவன், உதவி தலைமை ஆசிாியை மகாலட்சுமி, பெருமாள் கோவில் அறங்காவலா்குழு தலைவர் செந்தில்குமாா், உள்பட ஆசிாியா்கள் பெற்றோா்கள் மாணவ மாணவிகள் உள்பட பலா் கலந்து கொண்டான். டாக்டா மகிழ்ஜான் நன்றி கூறினாா்.