மதுரையில் நமது மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில மாநாடு மதுரையில் காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு சேம்பர் ஆப் காமர்ஸ் மஹாலில் நமது மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மண்டல மாநாடு நடைபெற்றது
இதற்கு கட்சியின் பொதுச் செயலாளர் கணேசன் தலைமை வகித்தார் துணை பொதுச் செயலாளர் பெரிய சேகரன் மதுரை மாவட்ட தலைவர் தில்லை ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் இந்த மாநாட்டில் நிறுவனத்தலைவர் பி.எல்.ஏ.ஜெகநாத்மிஸ்ரா பேசும்போது தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக நமது மக்கள் முன்னேற்றக்கழகம் திகழும் கட்சி தொடங்கி 5 மாதங்களில் தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளோம் குறிப்பாக கண்ணகி கோவிலை சீரமைத்து கும்பாபிஷேகம் நடத்தக் கோரி கையில் சிலம்பு ஏந்தி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.
இதே போல மக்கள் நலன் சார்ந்த பல்வேறு பிரச்சினைகளை முன்னிறுத்தி போரட்டத்தை நடத்தி வருகிறோம் மேலும் மாநிலம் முழுவதும் 6 மண்டலங்களாக பிரித்து மண்டல மாநாடு நடத்தி வருகிறோம் இதன் படி பாண்டிச்சேரி திருச்சி காஞ்சிபுரம் பெரும் திரள் மாநாடு நடத்தினோம். இதன் தொடர்ச்சியாக மதுரையிலும் மண்டல மாநாடு வெற்றி மாநாடாக அமைந்துள்ளது.
மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயர் சூட்ட வேண்டும் இவ்வாறு அவர் பேசினார் பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் மதுரை கோவையில் மெட்ரோ ரயில் சேவையை தொடங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் கற்புக்கரசி மங்களதேவி கண்ணகிக்கு மதுரையில் கண்ணகி கோட்டம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன இந்த மாநாட்டில் மாநிலபொதுச்செயலாளர் பார்மா ஜி.கணேசன் துணைப்பொதுச்செயலாளர் கூடல் சி.செல்வேந்திரன், பெரிசேகரன் மாநில அமைப்பாளர் ராமகிருஷ்ணன், சேகர் தேர்தல்பிரிவுசெயலாளர் வி.கோவிந்தமணி முதன்மைச்செயலாளர் ஆர்.ஏ..சுறா மாநில ஊடகப்பிரிவு அமைப்பாளர் இ.எம்.எஸ்.அபுதாஹீர் தலைமை நிலையச்செயலாளர்கள் மோகன் சி.டி.ரகுபரதி மாநில இளைஞர்அணி துணைச்செயலாளர் டி.எஸ்ஏ.அருண்குமார் ஏ.எம்..ஆனந்த் மதுரை மாவட்ட அமைப்பாளர்கள் தில்லைராஜ் சாஸ்தா என்.பாண்டியன் செந்தில்குமார் கிருஷ்ணன் ராஜமாணிக்கம் பொறுப்பாளர்கள் மற்றும் மாநில மாவட்ட நகர ஒன்றிய பேரூர் மற்றும் ஊரக நமது மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.