40 வருடமாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆக்கிரமிப்பு நிலம் அகற்றி புதிய சாலை. எட்டையாபுரம் ரோடு டு மேலூர் ரயில்வே நிலையம் செல்லும் வகையில் புதிய சாலை. மேயர் ஜெகன் பொியசாமி திடீர் ஆய்வு பொதுமக்கள் வரவேற்பு.


தூத்துக்குடி மாநகராட்சியில் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது அதனடிப்படையில் ஆக்கிரமிப்பு பாதைகள் கண்டறியப்பட்டு மீட்கப்பட்டு சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கனிமொழி எம்.பி தூத்துக்குடியில் இருந்து செல்லும் அனைத்து ரயில்களும் மேலூர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்று ஓன்றிய அரசுக்கு கோரிக்கை வைத்ததையடுத்து வருகிற 26ம் தேதி முதல் மேலூர் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்லும் என்று ஓன்றிய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது

இதனையடுத்து பொதுமக்களுக்கும் பயனாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்வதற்காக மேயர் ஜெகன் பொியசாமி அதிகாரிகளுடன் களத்தில் இறங்கினார். முதலில் எட்டையாபுரம் ரோடு மூன்றாம் ரயில்வே கேட் மேம்பாலம் கீழே உள்ள ஆக்கிரமிப்பு பார்வையிட்டு அந்த ஆக்கிரமிப்பு அகற்றி சாலை அமைக்கப்பட்டால் எட்டையாபுரம் ரோட்டில் இருந்து மேலூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு செல்லும் வகையில் புதிய சாலை அமைக்கப்படுகிறது இரவை பகலாக்கும் வகையில் மின்விளக்குகள் அமைக்கப்பட உள்ளது உடனடியாக 40 வருடமாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதை அகற்றப்பட்டு சாலைகள் மின்விளக்குகள் அமைக்கும் பணி உடனடியாக துவங்கியது. இதன் மூலம் மேலூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு வரும் பொதுமக்கள் பயனாளிகள் ரயில்வே மேம்பாலம் நடைபாதையில் ஏற வேண்டாம் கீழ் வழியாகவே ரயில்வே ஸ்டேஷனுக்கு பொதுமக்கள் செல்லும் வகையில் சாலை அமைக்கப் படவுள்ளது அந்தப் பாதை வழியாகவே நான்காம் ரயில்வே கேட்டுக்கு பொதுமக்கள் சென்றுவிடலாம். அதேபோல எட்டையாபுரம் ரோடு முன்பு செயல்பட்ட பால்சன் ஹோட்டல் அருகில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி மீனாட்சிபுரத்தில் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனைக்கு செல்லக்கூடிய வகையில் புதிய சாலை அமைக்கப்பட உள்ளது அதன் மூலம் மீனாட்சிபுரம் ஜெயராஜ் ரோட்டுக்கு சென்று விடலாம் அந்த ஆக்கிரமிப்பு சுமார் 30 வருடங்களாக தனி நபர் இரண்டு பகுதியில் ஆக்கிரமிப்பு உள்ளது அந்த ஆக்கிரமிப்பு உடனடியாக அகற்றி சாலை அமைக்கப்பட உள்ளது ஏற்கனவே சுரேஷ் ஐஏஎஸ் அகாடமி வழியாக ஒரு ஆக்கிரமிப்பு அகற்றி சாலை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது மீண்டும் பால்சன் ஹோட்டல் வழியாக சுரேஷ் ஐஏஎஸ் அகாடமி பின்புறம் வழியாக உள்ள ஆக்கிரமிப்பு அகற்றி அரவிந்த கண் மருத்துவமனை வழியாக மீனாட்சிபுரம் ஜெயராஜ் ரோடு டுவிபுரத்துக்கு இந்த சாலை பயன்படுத்தும் வகையில் உடனடியாக சாலை அமைக்கும் நடவடிக்கையை மாநகராட்சி நிா்வாகம் துவக்கி உள்ளது 40 வருடத்திற்கு மேலாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு இரண்டு சாலைகள் புதியதாக அமைக்கப்பட்டுள்ளது இதற்காக பொதுமக்கள் மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமிக்கு நன்றி தெரிவித்தனர். மாநகராட்சி பகுதியில் இதுவரை 75 கோடி மதிப்பிலான பல ஆக்்கிரமிப்பு இடங்களை கண்டறியப்பட்டு மாநகராட்சிக்கு கையப்படுத்தியுள்ளோம் பொதுமக்கள் நலன் கருதி எந்த ஆக்கிரமிப்பாக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்பட்டு பொதுமக்கள் நலன் தான் முக்கியம் என்று மாநகராட்சி நிா்வாகம் செயல்படும். என்று மேயா் ஜெகன் பொியசாமி தொிவித்தாா்.
ஆய்வின் போது நகர அமைப்பு திட்ட உதவி செயற்பொறியாளர் முனீா் அகமது, பகுதி செயலாளர் ரவீந்திரன், முன்னாள் மாமன்ற உறுப்பினரும் திமுக வட்டச் செயலாளர் ரவீந்திரன், போல்பேட்டை பகுதி திமுக பிரதிநிதி ஜேஸ்பர் உள்பட பொதுமக்கள் பலா் உடன் இருந்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *