பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விளக்கும் வகையிலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்துவது குறித்த விளக்கம் அளிக்கும் வகையிலும் மாதிரி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தாங்கிய நடமாடும் வாகனங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்.
பெரம்பலூர்.ஜன.25. பொம்பலூர் மாவட்ட அலுவலக வளாகத்தில்,
பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்காளர்களுக்கு வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விளக்கும் வகையிலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்த விளக்கம் அளிக்கும் வகையிலும் மாதிரி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தாங்கிய நடமாடும் வாகனங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026ஐ முன்னிட்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பயன்பாட்டினைப் பொதுமக்களுக்கு கொண்டு சேர்த்திடும் வகையில் விழிப்புணர்வு மையங்களை விரிவுபடுத்தி, பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து வாக்குசாவடி மையங்கள் உள்ள கிராம பகுதிகளுக்கு சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மின்னணு வாக்குபதிவு இயந்திரங்களுடன் கூடிய நடமாடும் செயல்முறை விளக்க மையங்கள் (Mobile Demonstration Van-MDV) தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த நடமாடும் வாகனங்களை 16-வது தேசிய வாக்காளர் தினமான மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இம்மையங்கள் ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை அனைத்து அலுவலக நாட்களிலும் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்படும். பொதுமக்கள் இந்த நல்வாய்ப்பினை பயன்படுத்தி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் செயல்படும் விதம் குறித்த விழிப்புணர்வினை பெற்றுப் பயனடைய வேண்டுமென மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்நிகழ்வில்,துணை தேர்தல் அலுவலர் / மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியளார்(பொது), சொர்ணராஜ் வாக்காளர் பதிவு அலுவலர்களான மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சக்திவேல் பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் அனிதா, தேர்தல் தனி வட்டாட்சியர் அருளானந்தம், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களான வட்டாட்சியர்கள் மற்றும் தேர்தல் துணை வட்டாட்சியர்கள் கலந்து கொண்டனர்.