துறையூர் பாலக்கரையில் பொது விநியோகத்திற்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் முகாம்
துறையூர் ஜன-25
திருச்சி மாவட்டம் துறையூர் பாலக்கரையில் உள்ள நியாய விலைக்கடையில் பொது விநியோகத்திற்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் முகாம் நேற்று (ஜனவரி-24) நடைபெற்றது. திருச்சி மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின்படி மாவட்ட வழங்கல் அலுவலரின் ஆலோசனையின் படி, துறையூர் வட்ட வழங்கல் அலுவலர் சுந்தரி தலைமையில் துறையூர் பாலக்கரை தெப்பகுளம் அருகில் உள்ள துறையூர் கூட்டுறவு பண்டகசாலை ஆர்-664 மினி சூப்பர் கடை எண் 4, நியாய விலை கடையில் 24/01/2026 அன்று காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை பொது விநியோகத்திற்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் முகாம் நடைபெற்றது.
இம் முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம் செய்தல், திருத்தம் செய்தல்,முகவரி மாற்றம் ,கடை மாற்றம்,தொலைபேசி எண் மாற்றம், அட்டை வகை மாற்றம் உள்பட 32 மனுக்கள் குடும்ப அட்டைதாரர்களிடம் பெறப்பட்டது. இந்த மனுக்களில் சில மனுக்களுக்கு உடனடி தீர்வும், சில மனுக்களுக்கு பரிசீலனை செய்தும் தீர்வு காணப்படும் என்று வட்ட வழங்கல் அலுவலர் சுந்தரி தெரிவித்தார். இம்முகாமில் உணவு வழங்கல் தனி வருவாய் ஆய்வாளர் தீன தயாளன் மற்றும் விற்பனையாளர் சத்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த சிறப்பு முகாமால் குடும்ப அட்டைதாரர்கள் அலைச்சல் இன்றி மிக சுலபமாக தங்களது குடும்ப அட்டை சம்பந்தமான குறைகளை நிவர்த்தி செய்ய முடிகிறது என்று குடும்ப அட்டைதாரர்கள் தமிழ் நாடு அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.
வெ.நாகராஜீ திருச்சி மாவட்ட செய்தியாளர்