கும்பகோணம் பகுதியில் செயல்பட்டு வரும் கல்வி மையம் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக குறைந்த கட்டணத்தில் கல்வியை வழங்கி வருகிறது இந்த நிறுவனமானது கடந்த 30 ஆண்டுகளாக 40,000 க்கும் மேற்பட்ட(மருத்துவர்கள்,பொறியியல்,வல்லுநர்கள்,ஆசிரியர்கள்,வழக்கறிஞர்கள் மற்றும் பல்வேறு துறைகளில் ) சிறந்த மாணவர்களை உருவாக்கிய நிறுவனமாகும்.
இந்த விழாவில் வீனஸ் கல்வி நிறுவனம் மற்றும் தொண்டு அறக்கட்டளை நிறுவனர்
டாக்டர் என்..மணிகண்டன் தலைமைதாங்கினார்.முன்னாள் தஞ்சை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டி.ஆர். லோகநாதன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக
மாவட்ட காங்கிரஸ் தலைவர் குமரன்,கும்பகோணம் மாநகர மேயர் சரவணன்,ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
பின்னர் கும்பகோணம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய வல்லுனர்கள், ஆசிரியர்கள் , மருத்துவர்கள், சமூக ஆர்வலர்கள்,பத்திரிக்கையாளர்கள்,வழக்கறிஞர்கள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு சிறப்பு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது
இந்த விழாவில் முக்கிய பிரமுகர்கள் ,ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஆயிரத்துக்கு மேற்பட்டோர்
கலந்து கொண்டனர்.
முன்னதாக மாணவர்கள் கண்ணைக் கவரும் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது