அறங்காவலர்கள் அமைச்சர் கீதா ஜீவனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் தூத்துக்குடி பாகம்பிரியாள் சங்கர ராமேஸ்வரர் திருக்கோவிலுள்ளது இந்த திருக்கோவிலுக்கு அறங்காவலர் குழு தலைவராக கந்தசாமியும் அறங்காவலராக சாந்தி. ஆறுமுகம். இளங்குமரன். ஜெயலட்சுமி ஆகியோர் நியமிக்கப்பட்டு இரண்டு தினங்களுக்கு முன்பு பதவி ஏற்று கொண்டனர். அதுபோல தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவராக செந்தில்குமார். அறங்காவலர்களாக மந்திரமூர்த்தி. மகேஸ்வரன். பால சங்கர். முருகேஸ்வரி ஆகியோர் நியமிக்கப்பட்டு சில தினங்களுக்கு முன்பு பதவி ஏற்று கொண்டனர். இந்த நிலையில் இன்று சமூகநலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவனனநேரில் சந்தித்து வைகுண்டபதி பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார் தலைமையில் அறங்காவலர்கள் அமைச்சர் கீதா ஜீவனுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களை பெற்றனர். அதுபோல சங்கர ராமேஸ்வரர் திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் கந்தசாமி தலைமையில் அறங்காவலர்கள் அமைச்சர் கீதா ஜீவனை சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களை பெற்றனர் அப்போது அமைச்சர் கீதா ஜீவன் அறங்காவலர்களிடம் கோயிலுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்ய வேண்டும் பக்தர்கள் சிறப்பான முறையில் தரிசனம் செய்வதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அழ அறங்காவலர் குழுவினரிடம் அமைச்சர் கீதா ஜீவன் கூறினார்