தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பாக 50 க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வீட்டுமனை பட்டா வழங்க கோரி அதிகாரிகளிடம் கேட்டதற்கு விரைவில் வீட்டுமனை பட்டா வழங்கப்படும் இல்லையென்றால் விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பாக அறவழியில் போராட்டம் நடைபெறும் என்று கூறினார்
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் அலங்கியம் பகுதியில் அனைத்து சமுதாய சார்ந்த மக்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர்
வீட்டுமனை இல்லாமல்
கூலி வேலை செய்து கொண்டு வாடகை வீட்டில் வாழ்ந்து வந்த நிலையில் கடந்த மூன்று ஆண்டு காலமாக கலெக்டர், தாசில்தார், கோட்டாட்சியர், அனைவரிடமும்
எங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க கோரி மனுக்கள் அளிக்கப்பட்டது.
நிலையில்
சில நாட்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியாளர் இவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கலாம் என்று சொன்ன உறுதிமொழியின் அடிப்படையில்
வருவாய் கோட்டாட்சியரிடம்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக சிறுத்தை முருகவேல் தலைமையில் 50க்கும் மேற்பட்ட எங்களுக்கு ஏற்கனவே கலெக்டர் ஒப்புதல் கொடுத்து விட்டார் நீங்கள் ஏன் கால தாமதம் செய்கிறீர்கள்
தேர்தல் வருவதற்குள் எங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று கோட்டாட்சியரிடம்
கேட்டதன் அடிப்படையில்
வருவாய் கோட்டாட்சியர் கூறியது
.தேர்தலுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை உறுதியாக நாங்கள் உங்களுக்கு வீட்டுமனை பட்டா சட்டப்படி மனுக்களை ஆய்வு செய்து வழங்குவோம் உறுதிமொழி அளித்தார். தாராபுரம் தொகுதி விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட செயலாளர் சிறுத்தை முருகவேல் விரைவில் இவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கவில்லை என்றால் தலைமை நிர்வாகிகளிடம் ஆலோசனை செய்த பின்பு அறவழியில் போராட்டம் நடைபெறும் என்று கூறினார்
உடன் ஜெய்பீம்அழகர்,திருமாரகு தலித்நாகராஜ்,தமிழ்மூர்த்தி,கொடிவளவன்,
மதன்குமார்,கார்த்திக்,முருகேஷ்,குமார்,காளிமுத்து,ஜாபர்,ஷேக் பரீத்,
தீன் முகமது,முகமது ஜாகிர் உசேன்,ஜாபர் சாதிக், ஆகியோர் கலந்து கொண்டனர்.