தஞ்சாவூர், ஜன- 28. தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் பாரத ஸ்டேட் வங்கி தஞ்சை பிரதான கிளை முன்பு 

தஞ்சை மாவட்ட ஒருங்கிணைந்த வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தை முன்னிட்டு தஞ்சை மாவட்ட அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தை பொறுப்பாளர் அன்பழகன் தேசிய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு, மாவட்ட செயலாளர் ஆர்.வினோத், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் அதிகாரிகள் சங்க இணை பொதுசெயலாளர் சாமிநாதன் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊழியர்கள் சங்க உதவி பொது செயலாளர் யோகராஜ் தஞ்சை மாவட்ட வங்கி ஊழியர்கள் சங்க (AIBEA ) பொது செயலாளர் கமலவாசன் இந்தியன் வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு பொறுப்பாளர் புவனா ஸ்டேட் வங்கி அதிகாரிகள் சங்க செயலாளர் மற்றும் அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பை சேர்ந்த காசிராஜன் ஸ்டேட் வங்கி ஊழியர்கள் சங்க உதவி பொது செயலாளர் ஆர்.விஜயராஜன் ஆகியோர் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

இந்திய வங்கிகள் சங்கத்துடன் கையெழுத்து இடப்பெற்ற 12 வது இருதரப்பு ஒப்பந்தம் மற்றும் 9 வது கூட்டு குறிப்பில் வாரம் 5 நாட்கள் வேலை முறை ஒப்பந்தத்தை ஊழியர்கள் சங்கம் மற்றும் அதிகாரிகள் சங்கத்துடன் இணைந்து ஒப்புதல் பெறப்பட்டது, இந்திய வங்கிகள் சங்கம் மத்திய அரசாங்கத்தின் ஒப்புதல் பெற அனுப்பப்பட்ட வகையில் இது வரை செயலுக்கு நடைமுறை படுத்தபடவில்லை, இந்த 5 நாட்கள் வேலை என்ற கோரிக்கையை வழியுறுத்தி இந்த வேலை நிறுத்த ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் சுமார் 500க்கு மேற்பட்ட வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *