திருவண்ணாமலை மண்டல அலுவலகத்தில் விபத்து ஏற்படுத்திய 38 ஓட்டுநர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.அவ்வமயம் திருவண்ணாமலை நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் மற்றும் இரண்டு சார்பு ஆய்வாளர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு ஓட்டுநர்களிடையே சாலை பாதுகாப்பு குறித்து சிறப்பு உரை நிகழ்த்தினர்.
அதை தொடர்ந்து திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலர் அவர்கள் ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் சிறப்புரை ஆற்றினார்.
அதை தொடர்ந்து மாலை திருவண்ணாமலை நீதிமன்ற MCOP சிறப்பு நீதிபதி மரியாதைக்குரிய திருமதி.R.கற்பகவள்ளி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பாதுகாப்பாக பேருந்து இயக்கிய 2 ஓட்டுநர்களுக்கு பரிசளித்து கௌரவித்தார்கள். மாண்புமிகு நீதிபதி அவர்களுக்கு நமது பொது மேலாளர் அவர்கள் நினைவு பரிசளித்து கௌரவித்தார்கள்.
இதில் 41 ஓட்டுநர்கள், துணை மேலாளர்கள் (நியமனம், தொ.நு), உதவி மேலாளர் (சட்டம்), பயிற்சி மைய மேற்பார்வையாளர்கள் மற்றும் அலுவல பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை நிருபர் க-முத்து