இராமநாதபுரம் ராமநாதபுரம் நகராட்சிக்கு உட்பட்ட
15வதுவார்ட்டில் உள்ள கொல்லம் பட்டறை தெரு, ஹாஜிமார் தெரு, அம்பலக்கார தெரு, கட்டியகாரத் தெரு, நாகநாதபுரம் சந்து, ஆகிய பகுதிகளில் மக்களின் தொடர் பிரச்சனையான கூட்டுக்குடிநீர், பாதாள சாக்கடை, குண்டும் குழியுமாக உள்ள சாலைகள், இதன் பிரச்சனைகள் தொடர்பாக தொடர்ந்து நகராட்சி ஆணையாளரிடமும், நகராட்சி நகர்மன்ற தலைவரிடமும் தொடர்ந்து மனு கொடுத்து முறையிட்டும் இதுவரை இந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.ஆகவே இதனை கண்டிக்கும் விதமாக 29.01.2026 நடைபெற்ற நகராட்சி கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் 15 வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் Aகாதர்பிச்சை_MC நகராட்சிகூட்டத்தில் பேசியதை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை ஆகவே நிர்வாகத்தை கண்டித்து எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தார்