கல்பாக்கம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் குடியரசு தின விழா
செங்கல்பட்டு, ஜன.30
செங்கல்பட்டு மாவட்டம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கல்பாக்கம் பணிமனையில் மேலாண் இயக்குனர் உத்தரவின்படியும் காஞ்சிபுரம் மண்டல பொது மேலாளர் வழிகாட்டுதலில், பணிமனை கிளை மேலாளர் பி.பழனி ஆலோசனைப்படி குடியரசு தினவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில் நேரக் கட்டுப்பாடு அலுவலரும் தொழிற்சங்க தலைவருமான விசயரங்கன்,மத்திய தொழிற்சங்க துணை தலைவர் ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பணிமனை வளாகம் தூய்மை செய்து வண்ணக்கோலமிட்டு அழகு படுத்தப்பட்டது.
இதில் தலைமை அலுவலக உதவி பொறியாளர் ஹேம் நாத் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செய்தார். இதில் அனைத்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள், அனைத்து பணியாளர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள், மற்றும் பள்ளி மாணவர்கள், பயணிகள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது