ஈரோடு ஜனவரி 30

அந் – நூர் மஸ்ஜித் & மதர்ஷா E.B.P.. நகர் சூளை ஈரோடு6 ஆம் ஆண்டு (மக்தப் மதர்ஷா) குழந்தைகள் ஆண்டு விழா மற்றும் சிறப்பு பயான் ஜனவரி 29 வியாழக்கிழமை மாலை 5 மணி முதல் 9 மணி வரை அன்னூர் மஸ்ஜித் அண்டு மதரஸா பள்ளி வளாகத்தில் சிறப்பாக நடை பெற்றது.

இவ்விழா வில் ஈரோடு கனி ராவுத்தர் குழம் ஜாமியா மஸ்ஜித் பள்ளிவாசல் தலைவர் ஷாஹுல் ஹமீது ஹாஜியார் தலைமை வகித்தார். அந் அந் – நூர் மஸ்ஜித் & மதர்ஷா நிர்வாக செயலாளர் அ. ரசூல் முகைதீன் வரவேற்புரை வழகினார்.

பள்ளிவாசல் இமாம் முகமது சல்மான் கிராத் ஓதிய பின்னர் ஆண்டு விழா துவங்க பட்டது மதர்ஷா ஆண்டுவிழா போட்டியில் பெண் மற்றும் ஆண் குழந்தை கள் சுமார் 50 பேர் கலந்து கொண்டு இஸ்லாமிய சட்டங்கள், நோன்பின் மாண்புகள், குரான் ஆயத்துகள், யாசீன் சூரா என சிறப்பாக மேடையில் ஓதி காட்டினர் பின்னர் சிறப்பாக ஓதிய மாணவர்களை தேர்ந்தெடுத்து அந்த மாணவர்களுக்கு முதல் பரிசு இரண்டாம் பரிசு மூன்றாம் பரிசு வழங்கப்பட்டது..

மேலும் போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவிகளுக்கும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டது..

இவ்விழாவில் கலந்து கொண்ட சிறு குழந்தைகளுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.

இவ்விழாவில் மௌலானா ஹபீஸ் தாவூதி ஜமாத் உலமா மண்டல செயலாளர் மற்றும் மௌலானா ஷாலிக் மற்றும் மௌலானா முஹம்மது அனஸ் மற்றும் மௌலானா கரீம் மேலும் பெண்கள் மதரசா ஒஸ்தாபிகள் ராபியத்தில் அரபியா ஆலிமா மற்றும் ஃபிர்தவ்ஸ் ஆகியோர் கலந்து கொண்டு இவ்விழாவினை சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு நல்கினர் மேலும் பள்ளிவாசல் நிர்வாகிகள் பொருளாளர் சாதிக் பாட்ஷா,நஸீர் துணைத் தலைவர் இஸ்மாயில் துணைச் செயலாளர் ஜான் அலி துணைப் பொருளாளர் பஷீர் பாஷா
மற்றும் பள்ளி வாசல் உறுப்பினர்கள் முஹம்மது தாஹா, பாபு உட்பட பல உறுப்பினர்கள் மற்றும் மார்க்க ஆலோசகர் தஸ்தகீர் மற்றும் மகளாவை சேர்ந்த தாய்மார்கள் பெரியவர்கள் குழந்தைகள் ஜமாத்தார்கள் அனைவரும் இவ்விழாவில் கலந்து கொண்டனர்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *